ரிசர்வ் வங்கி துணை கவர்னர் பூனம் குப்தா

 
வணிகம்

வளைகுடா இந்தியர்கள் அனுப்பும் பணம் குறையவில்லை: ரிசர்வ் வங்கி துணை கவர்னர் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வெளி​நாடு​களில் பணி​யாற்​றும் இந்​தி​யர்​கள், தாய்​நாட்​டுக்கு அனுப்​பும் பணம் இந்​திய பொருளா​தா​ரத்​தில் மிக முக்​கிய பங்கை வகிக்​கிறது. குறிப்​பாக வளை​குடா நாடு​களில் இருந்து இந்​தி​யர்​கள் அனுப்​பும் பணத்​தின் பங்​களிப்பு 38 சதவீத​மாக உள்​ளது.

அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போரால் ஒட்​டுமொத்த வளை​குடா நாடு​களும் பாதிக்​கப்​பட்டு உள்​ளன. இதனால் அந்த நாடு​களில் இருந்து இந்​தி​யர்​கள் அனுப்​பும் பணம் கணிச​மாக குறையும் என்று தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன.

இதுதொடர்​பாக ரிசர்வ் வங்கி துணை கவர்​னர் பூனம் குப்தா கூறிய​தாவது: கடந்த மார்ச் மாதத்​தில் வளை​குடா இந்​தி​யர்​கள் அனுப்​பிய பணம் வழக்​கத்​தை​விட அதி​க​மாகவே உள்​ளது.

மேற்கு ஆசி​யா​வில் (வளை​குடா நாடு​கள் உட்​பட) தகவல் தொழில்​நுட்​பம், சேவை, சுகா​தா​ரம், கல்​வி, கட்​டு​மானம் என பல்​வேறு துறை​களில் இந்​தி​யர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். இதில் ஏதாவது ஒரு துறை​யில் பாதிப்பு ஏற்​பட்​டால்​கூட மற்ற துறை​களில் பணி​யாற்​றும் இந்​தி​யர்​கள் தொடர்ந்து தாய்​நாட்​டுக்கு பணம் அனுப்பி வரு​கின்​றனர். இதனால் இந்த விவ​காரம் குறித்து கவலைப்​படத் தேவை​யில்​லை.

கரோனா பெருந்​தொற்று காலத்​தையே வெற்​றிகர​மாக கடந்து வந்​து​விட்​டோம். ஈரான் போரால் ஏற்​பட்​டிருக்​கும் நெருக்​கடிகளை​யும் வெற்​றிகர​மாக எதிர்​கொள்​ளும் திறன் இந்​தி​யா​வுக்கு உள்​ளது. நடப்​பாண்​டில் இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி 7.5 சதவீத​மாக இருக்​கும். பணவீக்​கம் 4 சதவீதத்​துக்​கும் குறை​வாக இருக்​கும். இவ்​வாறு பூனம் குப்​தா தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT