புதுடெல்லி: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் எப்எம்சிஜி பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் (ஆர்சிபிஎல்), தமிழ்நாட்டைச் சேர்ந்த உதயம் பிராண்டை வாங்கியுள்ளது.
உதயம் அக்ரோ புட்ஸ் நிறுவனம் தமிழகத்தில் பருப்பு வகைகளை உதயம் பிராண்டில் சந்தைப்படுத்தி வருகிறது. இந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் கையகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், ஐடி ப்ரெஷ் புட் மற்றும் ஆர்க்லா நிறுவனத்துக்கு சொந்தமான எம்டிஆர் ஆகியவற்றுக்கு எதிராக வலுவான போட்டியில் ரிலையன்ஸ் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
உதயம் நிறுவனத்தின் நிறுவனர்களான எஸ்.சுதாகர் மற்றும் எஸ்.தினகர் தமிழகத்தில் பிரதான உணவுப் பொருட்கள் வர்த்தகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர்கள். உதயம் நிறுவனத்தின் பேக்கேஜ் செய்யப்பட்ட பிராண்ட் பருப்பு வகைகளின் வணிகத்தை விரிவுபடுத்தியதில் அவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.
எனவே, இந்த கையகப்படுதலுக்கு பிறகும் உதயம்ஸ் நிறுவனத்தில் அவர்கள் சிறுபான்மை பங்குகளை தொடர்ந்து தக்கவைத்துள்ளனர்.