வணிகம்

மின்சாரப் பயன்பாட்டுக்கு வேகமாக மாறினால் எரிபொருள் இறக்குமதி செலவு ஆண்டுக்கு ரூ.9.6 லட்சம் கோடி மிச்சமாகும்: ஆய்வில் தகவல்

கிளைமேட் கம்பாட்டிபிள் ஃபியூச்சர்ஸ் நிறுவன ஆய்வு சொல்வது என்ன?

செய்திப்பிரிவு

மும்பை: மின்​சா​ர பயன்பாட்​டுக்கு வேக​மாக மாறினால் எரிபொருள் இறக்​குமதிக்​கான செலவு ஆண்​டுக்கு ரூ.9.6 லட்​சம் கோடி மிச்​சம் ஆகும் என புதிய ஆய்​வொன்​றின் மூலம் தெரியவந்துள்​ளது.

கிளைமேட் கம்​பாட்​டி​பிள் ஃபியூச்​சர்ஸ் என்ற ஆய்வு நிறு​வனம், ‘புதைபடிவ எரிபொருள் இறக்​குமதி​யி​லிருந்து விடு​படுதல்: இந்தியா​வுக்​கான விரைவான மின்​மய​மாக்​கல் திட்​டம்’ என்ற பெயரில் ஒரு ஆய்​வறிக்​கையை நேற்று வெளி​யிட்​டது. அதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: பெட்​ரோல், டீசல், இயற்கை எரிவாயு மற்றும் நிலக்​கரி உள்​ளிட்ட புதைபடிவ எரிபொருட்​களின் இறக்குமதியை சார்ந்​திருப்​ப​தைக் குறைக்க, நாடு முழு​வதும் மின்​மய​மாக்​கலை விரைவுபடுத்த வேண்​டும். இத​னால், 2034-35-ம் நிதி​யாண்​டுக்​குள் இந்​தி​யாவின் வருடாந்​திர எரிபொருள் இறக்குமதிச் செலவை 40 சதவீதத்​துக்​கும் மேல் குறைக்க முடியும்.

அதேநேரம், தற்​போதைய நிலையே தொடர்ந்​தால் 2035-ம் நிதியாண்​டில் எரிபொருள் இறக்​குமதிச் செலவு ரூ.17 லட்​சம் கோடி​யாக அதி​கரிக்​கும். மின்​மய​மாக்​கலைத் தீவிரப்படுத்தினால் அது ரூ.7.4 லட்​சம் கோடி​யாகக் குறையும். இதன் மூலம் ஆண்​டுதோறும் ரூ.9.6 லட்​சம் கோடி சேமிக்க முடியும். வழக்​க​மான போக்கு தொடர்ந்​தால் 2044-45-ம் நிதியாண்டில் இந்​தி​யாவின் எரிபொருள் இறக்​குமதிச் செலவு ரூ.23.3 லட்​சம் கோடி​யாக உயரும் என கணிக்​கப்​பட்​டுள்​ளது.

ஆனால், விரைவான மின்​மய​மாக்​கல் மூலம் 2045-க்​குள் நேரடி புதைபடிவ எரிபொருள் இறக்​குமதியை முற்​றி​லும் பூஜ்ஜியத்துக்குக் கொண்டு வர முடியும் என்​பது ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது. புதுப்​பிக்​கத்​தக்க மின்​சார உற்​பத்​தி​யைத் தாண்டி போக்​கு​வரத்து, தொழில் துறை, விவசாயம் மற்​றும் கட்டிடங்களின் ஆற்​றல் நுகர்​விலும் மின்​சா​ரப் பயன்​பாட்டை அதிகரிப்​பதே இதற்கு சரியான தீர்​வாகும்.

2045-ல் நேரடி இறக்​குமதி பூஜ்ஜிய​மானாலும், தொழில் துறை நிலக்​கரி மற்​றும் விமானம், கப்​பல் எரிபொருட்​கள் போன்​றவை மொத்த ஆற்​றல் தேவை​யில் 8 சதவீதத்​துக்​கும் குறைவாகத் தொடர்ந்து பயன்​படுத்​தப்​படும். ஆனால் அவை உள்​நாட்டு உற்பத்தி மூலமே பூர்த்தி செய்​யப்​படும். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT