வணிகம்

வதோதராவில் தயாராகும் ஏர்பஸ் சி295 விமானத்தை பிரதமர் தொடங்கி வைப்பார்!

சிங்கப்பூர் விமான கண்காட்சியில் தகவல்

செய்திப்பிரிவு

சிங்கப்பூர்: பாது​காப்​புத் ​துறைக்கு தேவை​யான ஏர்பஸ் சி295 போக்​கு​வரத்து விமானத்​தை, இந்​தி​யா​வில் தயாரிக்க டாடா நிறு​வனத்​துடன் ஏர்பஸ் ஒப்​பந்​தம் செய்​தது.

விமானப்​படை பயன்​பாட்​டுக்கு 40 விமானங்​கள் உட்பட மொத்​தம் 56 விமானங்​கள், குஜ​ராத்​தின் வதோத​ரா​வில் உள்ள டாடா-ஏர்​பஸ் மையத்​தில் தயாரிக்​கப்​படு​கின்​றன. இதுகுறித்து சிங்​கப்​பூரில் நடை​பெறும் விமான கண்​காட்சி​யில் ஏர்​பஸ் நிறுவன தலை​வர் வோட்​டர் வேன் வெர்ஷ் கூறும்போது, “ஏர்​பஸ் சி295 ரக விமானம் இந்தியாவில் தயாரிக்​கப்​படு​வது மிகப் பெரிய நடவடிக்கை.

          

எதிர்​காலத்​தில் வதோதரா மையத்​தில் இருந்து சி295 விமானங்​கள் விநி​யோகிக்கப்​படும். கடந்த சில ஆண்​டு​களாக ஏர்​பஸ் நிறு​வனம் இந்​தி​யா​வில் வலு​வாக வளர்ந்து கொண்​டிருக்​கிறது.

பெங்​களூரில் உள்ள ஏர்​பஸ் மையம் மிகப் பெரிய வளாகத்​துக்கு மாற்​றப்​படு​கிறது. இந்​தி​யா​வில் உள்ள திறமை​சாலிகளு​டனான உறவு வளர்ந்து வரு​கிறது. டெல்லி உட்பட பல நகரங்களில் பயிற்​சிகள் நடை​பெற்று வரு​கின்​றன” என்றார்.

SCROLL FOR NEXT