வணிகம்

ஐக்கிய அரபு அமீரகம் சென்றார் பிரதமர் மோடி: எல்பிஜி, பெட்ரோலியப் பொருட்களின் விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து

ரூ.48,000 கோடி முதலீடு செய்வதாக அமீரகம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

அபுதாபி: ஐக்​கிய அரபு அமீரகத்​துக்கு பிரதமர் மோடி நேற்று சென்றபோது, எல்​பிஜி, பெட்ரோலியப் பொருட்​கள் விநியோகம் மற்​றும் சேமிப்பு தொடர்பாக இரு நாடு​கள் இடையே புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

வர்த்​தகம், தொழில்​நுட்​பம், எரிசக்​தி, பாது​காப்​பு, புத்தாக்​கம் மற்றும் பசுமை வளர்ச்சி உள்​ளிட்ட துறை​களில் வளைகுடா மற்றும் ஐரோப்​பிய நாடுகளு​டன் உறவை மேம்​படுத்​துவ தற்​காக பிரதமர் மோடி நேற்று 5 நாடு​கள் பயணத்தை தொடங்​கி​னார். முதல் பயண​மாக அவர் நேற்று ஐக்​கிய அரபு அமீரகம் சென்​றார். அவரை அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நஹ்யன் வரவேற்​றார். பிரதமர் மோடிக்கு ராணுவ வீரர்​களின் அணிவகுப்பு மரி​யாதை​யும் அளிக்​கப்​பட்​டது.

பின்​னர் இரு தலை​வர்​களும் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். ஈரான் போர் காரண​மாக ஏற்​பட்​டுள்ள பதற்​றத்தை தணிக்க பேச்​சு​வார்த்தை நடத்​து​வதன் முக்​கி​யத்​து​வத்தை பிரதமர் மோடி வலியுறுத்​தி​னார். அமீரகம் மீது நடத்​தப்​பட்ட தாக்​குதலுக்கு கண்டனம் தெரி​வித்த பிரதமர் மோடி, மேற்கு ஆசி​யா​வில் அமைதி திரும்ப அனைத்து ஒத்​துழைப்​பு​களை​யும் இந்​தியா வழங்கும் என்​றும் உறு​தி​யளித்​தார். ஈரான் போர் நடந்​த​போது, இந்​தி​யர்​களுக்கு பாது​காப்பு அளித்​ததற்​காக அதிபர் அல் நஹ்யனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரி​வித்​தார்.

உலகளா​விய எரிசக்தி மற்​றும் வர்த்தக கப்​பல் போக்​கு​வரத்​துக்கு ஹார்​முஸ் ஜலசந்தி எந்த தடை​யும் இன்றி திறக்​கப்பட வேண்​டும் என்​றும், அங்​கும் சர்​வ​தேச சட்​ட​வி​தி​முறை​கள் பின்​னபற்​றப்பட வேண்​டிய அவசி​யத்​தை​யும் பிரதமர் மோடி வலி​யுறுத்​தி​னார். அதன்​பின் எல்​பிஜி காஸ், பெட்​ரோலியப் பொருட்​கள் விநியோகம் மற்​றும் சேமிப்பு தொடர்பாக இரு நாடு​கள் இடையே ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன் மூலம் நாட்​டின் எரிசக்தி பாது​காப்பு மேம்​படும்.

ஈரான் போர் காரண​மாக உலகள​வில் எரிபொருள் விநி​யோகத்தில் ஏற்​பட்​டுள்ள நெருக்கடி நிலை, பெட்ரோலியப் பொருட்​கள் விலை உயர்வு ஏற்​பட்​டுள்ள இந்த நேரத்​தில் இரு நாடுகள் இடையே ஏற்​பட்​டுள்ள இந்த ஒப்​பந்​தம் மிக முக்​கிய மானதாக கருதப்​படு​கிறது. தவிர பாது​காப்பு துறை​யில் ஒத்​துழைப்​பு, கட்​டமைப்​பு​களில் முதலீடு ஆகிய​வை​யும் கையெழுத்தானது. இந்​திய கட்​டமைப்பு மற்​றும் ஆர்​பிஎல் வங்கி மற்​றும் சம்​மான் கேபிடல் போன்ற நிதி நிறு​வனங்​களில் அமீரகம் 5 பில்​லியன் அமெரிக்க டாலர் (ரூ.48,000 கோடி) முதலீடு செய்ய உறுதி அளித்​துள்​ளது.

குஜ​ராத் மாநிலத்​தின் வாடினர் பகு​தி​யில் கப்​பல் பழுது பார்க்​கும் மையங்​கள் அமைக்​கும் ஒப்​பந்​த​மும் கையெழுத்​தானது. இதன் மூலம் இரு நாடு​கள் இடையே​யான பொருளா​தார உறவு மேம்படும். வர்த்தக உறவில் அமீரகம் இந்​தி​யா​வின் 3-வது பெரிய நா​டாக​வும், கடந்த 25 ஆண்​டு​களுக்கு மேலான மொத்​த முதலீட்டில்​ அமீரகம்​ 7-வது பெரிய நா​டாகவும்​ உள்​ளது.

மோடிக்கு எப்-16 போர் விமான பாதுகாப்பு

பிரதமர் மோடி நேற்று ஐக்கிய அரபு அமீரகம் சென்ற போது ‘ஏர் இந்தியா ஒன்’ என அழைக்கப்படும் போயிங் 777 - 300இஆர் ரக விமானத்தில் சென்றார். மோடியின் விமானம் அமீரகம் வான் எல்லைக்குள் நுழைந் ததும், அதற்கு அந்நாட்டு விமானப்படையின் எப்-16 ரக போர் விமானம் பாதுகாப்பாக உடன் வந்தது.

முக்கிய நாடுகளின் தலைவர்கள் வரும் போது, போர் விமானங்களை அனுப்பி பாதுகாப்பாக அழைத்து வருவதை ஐக்கிய அரபு அமீரகம் சமீபகாலமாக பின்பற்றி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்காக அந்நாட்டு அதிபர் அல் நஹ்யனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT