வணிகம்

விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு: ஆர்பிஐ முதல்கட்ட சோதனை முயற்சி

செய்திப்பிரிவு

மும்பை: இந்​தி​யா​வில் தற்​போதைய காகித நோட்​டு​களுக்​குப் பதிலாக, பிளாஸ்​டிக் (பாலிமர்) ரூபாய் நோட்​டு​களை அறி​முகம் செய்ய ரிசர்வ் வங்கி (ஆர்​பிஐ) திட்​ட​மிட்​டுள்​ளது. இதற்​கான முதல்​கட்ட சோதனை முயற்​சியை ரிசர்வ் வங்கி விரை​வில் தொடங்​க​வுள்​ளது.

இந்த முயற்சி வெற்​றிகர​மாக அமை​யும் பட்​சத்​தில், 2027-ல் முழு​வீச்​சில் பிளாஸ்​டிக் நோட்டுகள் புழக்​கத்​திற்கு வரும் என்று தெரி​கிறது. இந்த சோதனை முயற்சி முதலில் ரூ.10 மற்​றும் ரூ.20 போன்ற குறைந்த மதிப்​புள்ள நோட்​டு​களில் தொடங்க வாய்ப்​புள்​ளது. ஏனெனில், இந்த நோட்​டு​கள்​தான் மக்​களிடையே அதிக அளவில் கைமாறி, எளி​தில் அழுக்​காக​வும் சேதமடைய​வும் செய்​கின்​றன.

புதிய பிளாஸ்​டிக் நோட்​டு​கள் அறி​முகப்​படுத்​தப்​படு​வ​தால், இப்​போது புழக்​கத்​தில் உள்ள காகித ரூபாய் நோட்​டு​கள் செல்​லாத​தாகி விடாது. காகித நோட்​டு​களும், புதிய பிளாஸ்​டிக் நோட்​டு​களும் தங்​குதடை​யின்றி இணை​யாகவே புழக்​கத்​தில் இருக்​கும். காகித நோட்​டு​கள் படிப்​படி​யாகவே புழக்​கத்​தில் இருந்து மாற்​றப்​படும் என்று அதி​காரி​கள் தெளிவுபடுத்​தி​யுள்​ளனர்.

பிளாஸ்​டிக் நோட்​டு​களைத் தயாரிக்​கத் தேவை​யான பிரத்​யேக தாள்​களை வழங்க, உலகளா​விய நிறு​வனங்​களுக்கு ரிசர்வ் வங்​கி​யின் நோட்டு அச்​சிடும் பிரிவு அழைப்பு விடுத்​துள்​ளது. அதிநவீன பாது​காப்பு அம்​சங்​கள் கொண்ட இந்​தத் தாள்​களை வழங்க விண்​ணப்​பிக்க ஆகஸ்ட் 18 கடைசி நாளாகும். சாதாரண காகித நோட்​டு​களை விட பிளாஸ்​டிக் நோட்​டு​கள் நீண்ட காலம் உழைக்​கும். இவை தண்​ணீர், அழுக்கு அல்​லது எண்​ணெ​யால் எளி​தில் பாழா​காது.

மேலும், இவற்றை நகல் எடுப்​பது மிகக் கடினம் என்​ப​தால், கள்ள நோட்​டுப் புழக்​கத்தை முற்​றி​லு​மாகத் தடுக்க முடியும். ஆஸ்​திரேலி​யா, கனடா, பிரிட்​டன் போன்ற நாடு​கள் ஏற்​க​னவே இந்த முறையைப் பயன்​படுத்தி வரு​கின்றன என்​பது குறிப்​பிடத்​தக்​கது. எனினும், இந்த புதிய முயற்சி குறித்து ரிசர்வ் வங்கி தரப்​பில் இன்​னும் அதி​காரப்​பூர்​வ​மாக எவ்​வித அறி​விப்​பும் வெளி​யிடப்​பட​வில்​லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT