புதுடெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) சந்தாதாரர்கள், தங்கள் கணக்கில் உள்ள பணத்தை வரும் ஏப்ரல் மாதத்துக்குள் யுபிஐ மூலம் தங்களது வங்கி கணக்குக்கு மாற்றிக்கொள்ள முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில், ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் வைத்துக் கொண்டு மீதமுள்ள பணத்தை யுபிஐ மூலம் தொழிலாளர்கள் தங்கள் வங்கி கணக்குக்கு மாற்றிக் கொள்ளும் வசதியை தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் செய்து வருகிறது.
சந்தாதாரர்கள் தங்களின் வங்கிக்கணக்குக்கு மாற்றிக் கொள்ளும் தகுதியான தொகையை அறிந்து யுபிஐ மூலம் மாற்றிக் கொள்ளலாம். 8 கோடி சந்தாதாரர் யுபிஐ பின் எண் மூலம் அந்தத் தொகை தொழிலாளர் இணைத்துள்ள வங்கி கணக்குக்கு சென்றுவிடும்.
இந்த வசதியில் உள்ள மென்பொருள் பிரச்சினைகளை சரி செய்யும் பணியில் இபிஎப்ஓ ஈடுபட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்துக்குள் இந்த திட்டம் அமலாகும் எனவும், இதன் மூலம் சுமார் 8 கோடி சந்தாதாரர்கள் பயனடைவர் எனவும் கூறப்படுகிறது.