வணிகம்

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு: எண்ணெய் நிறுவனங்கள் சொல்வது என்ன?

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 5 நாட்​களில் பெட்​ரோல், டீசல் விலை மீண்​டும் உயர்ந்​துள்​ளது. டெல்லி உள்​ளிட்ட பல்​வேறு நகரங்​களில் ஒரு லிட்​டர் பெட்​ரோல் 90 பைசா​வும், சென்​னை​யில் 82 பைசா​வும் விலை அதி​கரித்​திருக்​கிறது.

அமெரிக்கா - ஈரான் இடையி​லான மோதல் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி மூடப்​பட்டு வளை​குடா நாடு​களில் இருந்து கச்சா எண்​ணெய், எரி​வாயு இறக்​குமதி செய்ய முடி​யாத சூழல் நில​வு​கிறது. மேலும் அமெரிக்கா - ஈரான் போருக்கு முன்​பாக ஒரு பேரல் கச்சா எண்​ணெய் 70 டாலருக்கு விற்​கப்​பட்​டது. தற்​போது ஒரு பேரல் 100 முதல் 120 டாலர் வரை விற்​பனை​யாகிறது. விலை உயர்​வால் இந்​திய எண்​ணெய் நிறு​வனங்​களுக்கு தினசரி ரூ.1,000 கோடி இழப்பு ஏற்​படு​கிறது.

இதையடுத்து கடந்த 15-ம் தேதி பெட்​ரோல், டீசல் விலை லிட்​டருக்கு ரூ.3 விலை உயர்த்​தப்​பட்​டது. இதன்​மூலம் ரூ.250 கோடி இழப்பு சரி செய்​யப்​பட்​டது. எனினும் இந்​திய எண்​ணெய் நிறு​வனங்​கள் நாள்​தோறும் ரூ.750 கோடி இழப்பை சந்​தித்து வரு​கின்​றன.

இந்தச் சூழலில் 5 நாட்​களில் பெட்​ரோல், டீசல் விலை மீண்​டும் விலை உயர்த்​தப்​பட்டு இருக்​கிறது. பெரும்​பாலான நகரங்​களில் ஒரு லிட்​டர் பெட்​ரோல், டீசல் 90 பைசா அதி​கரிக்​கப்​பட்டு உள்​ளது. சென்​னை​யில் பெட்​ரோல் விலை 82 பைசா உயர்ந்து ஒரு லிட்​டர் ரூ.104.49,டீசல் விலை 86 பைசா உயர்ந்து ஒரு லிட்​டர் ரூ.96.11-க்கு விற்​கப்​படு​கிறது. தலைநகர் டெல்​லி​யில் ஒரு லிட்​டர் பெட்​ரோல் ரூ.97.77-ல் இருந்து ரூ.98.64 என உயர்ந்​துள்​ளது.

அங்கு டீசல் விலை ரூ.90.67-ல் இருந்து ரூ.91.58 என விலை உயர்ந்​துள்​ளது. கொல்​கத்​தா​வில் பெட்​ரோல் விலை 96 பைசா உயர்ந்​து, ஒரு லிட்​டர் ரூ.109.70 என விற்​பனை ஆகிறது. டீசல் விலை 94 பைசா உயர்ந்​து, ஒரு லிட்​டர் 96.07 என விற்​பனை ஆகிறது.

இதுதொடர்​பாக எண்​ணெய் நிறுவன வட்​டாரங்​கள் கூறிய​தாவது: வளை​குடா நாடு​களுக்கு மாற்​றாக ரஷ்​யா, அமெரிக்கா மற்​றும் ஆப்​பிரிக்​கா​வின் அங்​கோலா உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களிடம் இருந்து கச்சா எண்​ணெய், எரி​வாயு இறக்​குமதி செய்​யப்​படு​கிறது. கச்சா எண்​ணெய் விலை உயர்​வு, நீண்ட தொலைவு உள்​ளிட்ட காரணங்​களால் இறக்​குமதி செலவு அதி​கரிக்​கிறது.

கச்சா எண்​ணெய் இறக்​கும​தி, சுத்​தி​கரிப்​புக்கு 45%, மத்​திய அரசு வரி 25%, மாநில அரசு வரி 20%, பெட்​ரோல் நிலைய உரிமை​யாளர் கமிஷன் 10% என்ற அடிப்​படை​யில் பெட்​ரோல், டீசல் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. மத்​திய அரசு சுங்க வரியை ரூ.10 குறைத்​தது. அதன்​பிறகும் எண்​ணெய் நிறு​வனங்​களின் இழப்​பு​கள் தொடர்ந்​தன. வேறு வழி​யின்றி தற்​போது சுமார் 90 பைசா விலை உயர்த்​தப்​பட்டு உள்​ளது. இவ்​வாறு எண்​ணெய் நிறுவன வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

SCROLL FOR NEXT