மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் வழக்கமான நிதிக் கொள்கைக் குழுக்கூட்டம் மும்பையில் 2 நாளாக நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா நேற்று கூறியதாவது: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அது 5.25% ஆகவே தொடர்ந்து நீடிக்கும். 2026-27 நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.6% லிருந்து 6.7% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பணவீக்க மதிப்பீடு 5.1% லிருந்து 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை பல்வேறு காலநிலைகளில் சோதனை செய்ய உள்ளோம். இந்த நோட்டுகள் அதிகம் நீடித்து உழைக்கும் தன்மையும், நீண்ட ஆயுட்காலமும் கொண்டவை.
முதல்கட்டமாக ரூ.10, ரூ.20 மதிப்புடைய பிளாஸ்டிக் நோட்டுகள் சோதனை முறையில் புழக்கத்தில் விடப்பட உள்ளன. இந்த சோதனை முடிவுகளின்அடிப்படையில், 2027-28-ல் நாடுமுழுவதும் முழு அளவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த திட்டமி்டப்பட்டுள்ளது. புதிய பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகப்படுத்தினாலும், தற்போது உள்ள ரூபாய் நோட்டுகள் செல்லுபடி ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.