வணிகம்

புதிய பொலிவுடன் கியா செல்டோஸ் கார் அறிமுகம்: தொடக்க விலை ரூ.10.99 லட்சம்

செய்திப்பிரிவு

சென்னை: பல்​வேறு நவீன மாற்​றங்​களு​டன் கியா நிறு​வனத்​தின் புதிய ‘கியா செல்​டோஸ்’ கார் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதன் தொடக்க விலை ரூ.10.99 லட்​சமாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​திய கார் சந்​தை​யில் தனக்​கென தனி இடத்​தைப் பிடித்​துள்ள கியா மோட்​டார்ஸ் நிறு​வனம், நவீன மாற்​றங்​களு​டன் கூடிய தனது 2-ம் தலை​முறை ‘ஆல் நியூ செல்​டோஸ்’ காரை சென்​னை​யில் நடை​பெற்ற விழாவில் அதி​காரப்​பூர்​வ​மாக நேற்று அறி​முகப்​படுத்​தி​யது. கியா இந்​தியா மண்டல விற்​பனை பிரிவு மேலா​ளர் கவுரவ் குமார் மற்​றும் விற்​பனைப் பங்​கு​தா​ரர்​கள் முன்​னிலை​யில் இந்த புதிய மாடல் கார் அறி​முகம் செய்​யப்​பட்​டது.

இது முந்​தைய மாடல்​களை விட கூடு​தல் வலிமை வாய்ந்த ‘குளோபல் கே3’ பிளாட்​பார்மில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. வாடிக்​கை​யாளர்​களின் எதிர்​பார்ப்​பைப் பூர்த்தி செய்​யும் வகை​யில் இதன் நீளம் (4,460 மி.மீ), அகலம் (1,830 மி.மீ) மற்றும் வீல் பேஸ் (80 மி.மீ) ஆகியவை கணிச​மாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளன. குறிப்​பாக, காரின் உட்​புறத்​தில் கால்​களை வசதி​யாக வைப்​ப​தற்​கான இடவசதி மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளதுடன், தரைக்​கான இடைவெளி 200 மி.மீ ஆக உயர்த்​தப்​பட்​டுள்ளது. இது கரடு​முர​டான சாலையிலும் தடை​யின்றி பயணிக்கும்.

இதில் 31 இன்ச் ‘டிரினிட்டி பனோரமிக்’ திரை இடம்பெற்றுள்​ளது. ஓட்​டுநர் இருக்​கையை 10 நிலைகளில் மாற்​றியமைக்கும் வசதி, ரிவர்ஸ் எடுக்​கும் போது தானாகவே இறங்கும் பக்​கவாட்டு கண்​ணாடிகள், பார்க்கிங் சென்​சார்ஸ் மற்​றும் போஸ் சவுண்ட் சிஸ்​டம் என பல அம்​சங்​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளன.

பாது​காப்​புக்கு அதிக முக்​கியத்​து​வம் அளிக்​கும் வகை​யில், ‘அடாஸ் லெவல்​-2’ தொழில்​நுட்பம், அனைத்து வேரியன்ட்களி​லும் 6 ஏர்​பேக்​கு​கள், 24 வகை அடிப்​படை பாது​காப்பு அம்​சங்​களும் வழங்​கப்​பட்​டுள்​ளன.

வழக்​க​மான பெட்​ரோல், டீசல் மற்​றும் டர்போ இன்​ஜின் தேர்​வு​களு​டன், 10 நிறத்தில் அறி​ முக​மாகி​யுள்ள இதன் தொடக்க விலை ரூ.10.99 லட்​ச​மாகும்.

SCROLL FOR NEXT