வணிகம்

சோழிங்கநல்லூர் எல்காட் நிறுவனத்தில் ரூ.84 கோடியில் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடம் திறப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சோழிங்​கநல்​லூர் எல்காட் நிறு​வனத்​தில் ரூ.84.42 கோடி செல​வில் கட்​டப்​பட்​டுள்ள புதிய தகவல் தொழில்​நுட்​பக் கட்​டிடத்தை முதல்​வர் ஸ்டா​லின் காணொலி வாயி​லாக திறந்து வைத்​தார்.

தமிழகம் முழு​வதும் உலகத்​தரம் வாய்ந்த புதிய தகவல் தொழில்​நுட்ப பூங்​காக்​களை உரு​வாக்​குதல், தகவல் தொழில்​நுட்​பத் துறை வளர்ச்​சிக்​கான நடவடிக்​கைகளை மேற்​கொள்​ளுதல் போன்ற பணி​களை தமிழ்​நாடு மின்​னணு நிறு​வனம் (‘எல்காட்’) மேற்​கொண்டு வரு​கிறது. அந்த வகை​யில், சென்​னை, கோவை, மதுரை, திருச்​சி, சேலம், திருநெல்​வேலி, ஓசூரில் சிறப்பு பொருளா​தார மண்​டலங்​களை எல்காட் நிறு​வி​யுள்​ளது.

          

3 ஆயிரம் பேருக்கு வேலை​: இந்​நிலை​யில், சென்னை சோழிங்​கநல்​லூர் சிறப்பு பொருளா​தார மண்​டலத்​தில் 2.33 லட்​சம் சதுரஅடி பரப்​பள​வில் ரூ.84.42 கோடி செல​வில் 11 தளங்​களு​டன் எல்காட் தகவல் தொழில்​நுட்ப கட்​டிடம் கட்​டப்​பட்​டுள்​ளது. இக்​கட்​டிடத்​தை, தலை​மைச் செயல​கத்​தில் இருந்து முதல்​வர் ஸ்டா​லின் காணொலி வாயி​லாக திறந்து வைத்​தார்.

தமிழக தகவல் தொழில்​நுட்​ப​வியல், டிஜிட்​டல் சேவை​கள் துறை சார்​பில் ஒருங்​கிணைந்த கட்​டிட மேலாண்மை அமைப்​பு, 24 மணிநேர பாது​காப்பு வசதி, பசுமை மின்​சக்தி பயன்​பாடு, நீர் மேலாண்மை கட்​டமைப்பு என பல வசதி​களு​டன் சிறிய, நடுத்தர மற்​றும் பெரிய அளவி​லான தகவல் தொழில்​நுட்ப நிறு​வனங்​களின் பயன்​பாட்​டுக்கு ஏற்ப இந்த கட்​டிடம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம் சுமார் 3 ஆயிரம் பேருக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த நிகழ்​வில் தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன், தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், தகவல் தொழில்​நுட்​பத் துறை செயலர் பிரஜேந்​திர நவ்​நீத், எல்காட் நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் கா.ப.​கார்த்​தி​கேயன், நிர்​வாக இயக்​குநர் வெ.தீபனா விஸ்​வேஸ்​வரி உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT