வணிகம்

படிவம் 16-க்கு பதில் 130 உட்பட வருமான வரிப் படிவம் தாக்கல் முறையில் ஏப்ரல் 1 முதல் மாற்றம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வரும் ஏப்​ரல் 1ம் தேதி முதல் புதிய வரு​மான வரி விதி​கள் 2026 அமலுக்கு வர உள்​ளது. இதனால், வரு​மான வரித் தாக்​கல் (ஐடிஆர்) முறை​யில் குறிப்​பிடத்​தக்க மாற்​றங்​கள் வரவுள்​ளன.

குறிப்​பாக மறு​வடிவ​மைப்பு செய்​யப்​பட்ட ஐடிஆர் படிவங்​கள், 'படிவம் 16'-க்கு பதில் புதிய 'படிவம் 130' அறி​முகம் மற்​றும் துல்லியத் ​தன்​மையை மேம்​படுத்த தானி​யங்கி தாக்​கல் முறை உள்​ளிட்ட புதிய நடை​முறை​கள் அமலுக்கு வர உள்​ளன. புதிய வரி கட்​டமைப்​பின் கீழ் முக்​கிய மாற்​ற​மாக, நிறு​வனங்​களால் வழங்கப்​படும் ‘படிவம் 16' நீக்​கப்​பட்​டு, அதற்​குப் பதில் ‘படிவம் 130' அறி​முகப்​படுத்​தப்​படு​கிறது.

          

இது சம்​பளம் பெறும் ஊழியர்​கள் மற்​றும் ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களுக்கு நிறு​வனத்​தால் வழங்​கப்​படும் வரு​டாந்​திர டிடிஎஸ் சான்​றிதழ் ஆகும். இதில் ஈட்​டிய சம்​பளம், பிடித்​தம் செய்​யப்​பட்ட வரி, அரசுக்குச் செலுத்​தப்​பட்ட வரி மற்​றும் அனு​ம​திக்​கப்​பட்ட வரி விலக்​கு​கள் பற்​றிய விவரங்​கள் இருக்​கும். சம்​பளத்​தில் இருந்து வரி பிடித்​தம் செய்​யப்​பட்டு அரசுக்கு செலுத்​தப்​பட்​டதற்​கான ஆவண​மாக இந்த படிவம் விளங்​கும்.

வரு​மான வரிச் சட்​டம் 2025, பிரிவு 402(39)-ன்​படி, குறிப்​பிட்ட மூத்த குடிமக்​கள் ஈட்​டும் வட்டி வரு​மான​மும் இதில் அடங்​கும். படிவம் 130-ஐ கைகளால் பூர்த்தி செய்ய முடி​யாது. இது டிரேசஸ் (TRACES) இணை​யதளம் வழி​யாக மட்​டுமே உரு​வாக்​கப்​படும்​.

SCROLL FOR NEXT