வணிகம்

200, 500 ரூபாய் நோட்டுகளை நேபாளம் எடுத்துச் செல்ல அனுமதி

செய்திப்பிரிவு

காத்மாண்டு: இந்தியாவில் 2016-ல் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாத தாக்கப்பட்டு, புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதையடுத்து (ரூ.2,000 நோட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது), ரூ.100-க்கு மேற்பட்ட இந்திய நோட்டுகளுக்கு நேபாளம் தடை விதித்ததால், ரூ.25,000 வரம்பு இருந்தாலும் பயணிகள் ரூ.100 நோட்டுகளை மட்டுமே கொண்டு செல்ல முடிந்தது.

இந்நிலையில், அந்தத் தடையை நீக்கி, இந்திய மற்றும் நேபாள பயணிகள் இனி ரூ.25,000 வரை இந்திய ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளைக் கொண்டு செல்ல நேபாள அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து நேபாள மத்திய வங்கியின் செய்தித் தொடர்பாளர் குரு பிரசாத் பவுடேல் கூறுகையில், “பிப்ரவரி 11 அரசிதழில் வெளியிடப்பட்ட விதிகளின்படி 2016 நவம்பர் 9-க்கு பின் வெளியான புதிய ரூ.200, ரூ.500 நோட்டுகளை பயணிகள் கொண்டு செல்லலாம், ஆனால் பழைய நோட்டுகளுக்கான தடை தொடரும்.

மேலும், நேபாள குடிமக்கள் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலிருந்தும் இந்தியப் பணத்தைக் கொண்டு வரவோ அல்லது நேபாளத்திலிருந்து இந்தியா அல்லாத வேறு எந்த நாட்டிற்கும் அதை எடுத்துச் செல்லவோ கூடாது” என்றார்.

SCROLL FOR NEXT