மும்பை: வைரங்கள் குறித்து இந்தியத் தர நிர்ணய ஆணையம் (பிஐஎஸ்) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘வைரம்’ என்ற சொல்லை இனி இயற்கையாக கிடைக்கும் வைரங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பிஐஎஸ் உத்தரவிட்டுள்ளது.
இணைய வழி வர்த்தகத்தில், வைரம் மற்றும் அதற்கு மாற்றாக பயன்படுத்தப்படும் கற்களை குறிக்கப் பல்வேறு குழப்பமான சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனால் உண்மையான வைரமா அல்லது செயற்கை வைரமா என்பதில் பெரும் சந்தேகம் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.