மும்பை: மேற்கு ஆசிய போர் பதற்றம் சற்று தணிந்த நிலையில் உலக அளவில் பங்குச் சந்தைகள் இந்திய பங்குச் சந்தைகள் நேற்று காலையில் உயர்வுடன் தொடங்கியது. படிப்படியாக 1 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது.
எனினும், சிறிது நேரத்தில் சரியத் தொடங்கியது. பிற்பகல் 1 மணிக்கு மேல் மீண்டும் சற்று உயரத் தொடங்கியது. எனினும் வர்த்தக இறுதியில் லேசான சரிவுடன் முடிந்தது.
நேற்று வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 122 புள்ளிகள் சரிந்து 77,988-லும் நிப்டி 34 புள்ளிகள் சரிந்து 24,196-லும் நிலை பெற்றது.