வணிகம்

தமிழகத்தில் உலகளாவிய திறன் மையங்கள்: பன்னாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் அதிக அளவில் உலகளா​விய திறன் மையங்​களை (ஜிசிசி) அமைப்​பது தொடர்​பாக பன்​னாட்டு நிறு​வனத்​துடன் தமிழக அரசு புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துள்​ளது. செல​வைக் குறைக்​க​வும் திறமை​களைப் பயன்​படுத்​திக் கொள்​ள​வும் செயல்​பாடு​களை மேம்​படுத்​த​வும் பன்​னாட்டு நிறு​வனங்​கள் வெளி​நாடு​களில் ‘ஜிசிசி’ எனப்​படும் உலகளா​விய திறன் மையங்​களை அமைத்து வரு​கின்​றன.

அந்த வகை​யில், தமிழக அரசின் தொழில் வழி​காட்டு மையம், ஏஎன்​எஸ்​ஆர் என்ற பன்​னாட்டு நிறு​வனத்​துடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம், தொழில்​துறை அமைச்​சர் டிஆர்பி ராஜா முன்​னிலை​யில் நேற்று கையெழுத்​தானது.

ஏஎன்​எஸ்​ஆர் நிறு​வனம் பார்ச்​சூன் 500 நிறு​வனங்​கள் மற்​றும் அதிக வளர்ச்சி கொண்ட தொழில் நிறு​வனங்​களுக்​கான உலகளா​விய திறன் மையங்​களை நிறு​வி வரும் ஒரு பன்​னாட்டு நிறு​வனம் ஆகும்.

மேலும், ஏஐ தொழில்​நுட்​பம், இணைய பாது​காப்​பு, டிஜிட்​டல் வணி​கம், ஆராாய்ச்சி மற்​றும் மேம்​பாடு, டேட்டா சயின்ஸ் என பலதரப்​பட்ட துறை​களில் நிபுணத்​து​வம் பெற்று திகழ்​கிறது.

இந்த ஒப்​பந்​தம் குறித்து தொழில்​துறை அமைச்​சர் டிஆர்பி ராஜா கூறியதாவது: “தமிழகத்​தில் அதிக அளவில் உலகளா​விய திறன் மையங்​கள் (ஜிசிசி) வரு​வதற்கு ஏஎன்​எஸ்​ஆர் நிறு​வனம் உதவும்.

ஜிசிசி அமைப்​ப​தற்கு உகந்த கொள்​கைகள், உடனடி அனு​ம​தி, தேவைப்​படும் இடங்​களை ஒதுக்​கீடு செய்​வது, திறமை​யான பணி​யாளர்​கள் கிடைக்​கச் செய்​வது என தமிழக அரசு அனைத்து வித​மான ஆதர​வை​யும் அளிக்​கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT