சமூக வலைதளத்தில் போலி வாட்ஸ்அப் குழு ஆரம்பித்து பெண்கள் குறித்து அவதூறு பரப்பிய 2 பேர் கைது

கைது செய்யப்பட்ட செல்வராஜ், சுரேஷ்.

கைது செய்யப்பட்ட செல்வராஜ், சுரேஷ்.

Updated on
1 min read

சென்னை: சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் செயல்படுகிறது.

இந்த சங்​கத்​தில் சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம் மற்​றும் செங்​கல்​பட்​டில் வசிக்​கும் 21 ஆயிரம்பேர் ஆயுட்​கால உறுப்​பினர்​களாக உள்​ளனர்.

இந்​நிலை​யில், இந்த சங்​கத்​தின் பெயரில் போலி​யான வாட்​ஸ்​அப் குழு ஆரம்​பிக்​கப்​பட்டு அதில் சங்​கத் தலை​வர் ஆனந்​த​ராஜ் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் மற்​றும் அவர்​களின் மனை​வி​கள், மகள்​கள் தொடர்​பாக தொடர்ந்து அவதூறு கருத்​துகள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, இந்த விவ​காரம் தொடர்​பாக எழும்​பூர் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து சங்​கம் பெயரில் போலி​ வாட்​ஸ்​அப் குழு தொடங்​கி, அவதூறு கருத்​துகளைப் பதி​விட்டு வந்த போரூரைச் சேர்ந்த செல்​வ​ராஜ், சுரேஷ் ஆகியோரை நேற்று கைது செய்​தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

<div class="paragraphs"><p>கைது செய்யப்பட்ட செல்வராஜ், சுரேஷ்.</p></div>
மீனவ இளைஞர்களுக்கு யுபிஎஸ்சி தேர்வு பயிற்சி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in