வணிகம்

2026-27-ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7% ஆக இருக்கும்: மூடிஸ் நிறுவனம் கணிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2026-27-ம் நிதி​யாண்​டில் இந்தியாவின் ஒட்​டு மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி (ஜிடிபி) வளர்ச்சி 7 சதவீத​மாக இருக்​கும் என்று மூடிஸ் ரேட்​டிங்ஸ் நிறு​வனம் கணித்​துள்​ளது. மூடிஸ் ரேட்டிங்ஸ் நிறு​வனம் என்​பது உலகள​வில் மிக முக்​கிய​மான கடன் தர மதிப்​பீட்டு நிறு​வனம் (கிரெடிட் ரேட்​டிங் ஏஜென்​சி) ஆகும். இது நிறு​வனங்​கள், வங்​கி​கள் மற்​றும் நாடு​கள் வாங்​கும் கடனைத் திருப்​பிச் செலுத்​தும் திறன் அவற்​றுக்கு எவ்​வளவு இருக்கிறது என்​பதை ஆய்வு செய்​து, அதற்​கேற்ப தரவரிசையை வழங்​கும்.

இந்​நிலை​யில் இந்த மூடிஸ் நிறு​வனம் இந்​தி​யா​வின் ஜிடிபி வளர்ச்சி​யானது 2026-27-ம் நிதி​யாண்​டில் 7 சதவீத​மாக இருக்​கும் என்று கணித்​துள்​ளது. முன்​ன​தாக இந்​தி​யா​வின் ஜிடிபி வளர்ச்சியானது 6 சதவீத​மாக இருக்​கும் என்று மூடிஸ் கூறி வந்த நிலை​யில், தனது நிலையை மாற்​றிக் கொண்டு ஜிடிபி வளர்ச்சி 7 சதவீத​மாக இருக்​கும் என்று உயர்த்​தியுள்​ளது.

மேலும், 2026-ம் ஆண்​டின் முதல் ஆறு மாதங்​களில் இந்​தி​யா​வின் உண்​மை​யான ஜிடிபி வளர்ச்சி ஆண்​டுக்கு ஆண்டு அடிப்படையில் 8.2 சதவீத​மாக அதி​கரித்​துள்​ள​தாக மூடிஸ் தெரிவித்​துள்​ளது. மற்ற அனைத்து ஜி20 நாடு​களின் பொருளா​தார வளர்ச்​சியை விட​வும் இந்​தி​யா​வின் பொருளா​தா​ரம் வேக​மாக வளரும் என்று எதிர்​பார்ப்​ப​தாக மூடிஸ் தெரி​வித்​துள்​ளது.

மத்​திய கிழக்​குப் பகு​தி​யில் நில​வும் மோதல்​களுக்கு மத்​தி​யிலும் உலகளா​விய அதிர்​வு​களைத் தாங்​கும் திறனை இந்​தி​யப் பொருளா​தா​ரம் வெளிப்​படுத்​தி​யுள்​ள​தாக​வும் மூடிஸ் ரேட்​டிங்ஸ் தெரி​வித்​துள்​ளது. அதே​நேரத்​தில், உயர்ந்த கச்சா எண்​ணெய் விலை மற்​றும் எல் நினோ தாக்​கத்​தால் பணவீக்​கம் தொடர்​பான அபா​யங்​கள் இருப்​ப​தை​யும் மூடிஸ் சுட்​டிக்​காட்​டி​யுள்​ளது.

ஜிடிபி வளர்ச்​சிக்கு கச்சா எண்​ணெய் இறக்​கும​திக்​கான ஆதாரங்களை இந்​தியா பன்​முகப்​படுத்​தி​யிருப்​பது, கணிச​மான அந்​நியச் செலா​வணி கையிருப்பு மற்​றும் வலு​வான உள்​நாட்​டுத் தேவை ஆகியவை முக்​கிய பாது​காப்​புக் காரணி​களாக அமைந்​துள்​ளது என்​றும் மூடிஸ் தெரி​வித்​துள்​ளது.

இந்​தி​யப் பொருளாதாரம் 2026-27-ம் நிதி​யாண்​டின் ஜூன் வரை முடிந்த காலாண்​டில் 7.8 சதவீத வளர்ச்​சி​யைப் பதிவு செய்​தது. இது இந்திய ரிசர்வ் வங்​கி கணித்த 7 சதவீத ஜிடிபி வளர்ச்​சியை விட அதி​கம்​ என்​பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT