வணிகம்

பி.எப். ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக உயர்த்த மத்திய அரசு பரிசீலனை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இபிஎப்) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை கணிசமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

தற்போது ரூ.1,000 குறைந்தபட்ச ஓய்வூதியமாக உள்ளது. இத்தொகை ரூ.7,500 ஆக உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓய்வூதியத் தொகையை உயர்த்த நாடாளுமன்றக் குழு ஒன்றும் பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து இறுதி முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு முக்கிய மாற்றமாக, ஏடிஎம் வாயிலாக பிஎஃப் நிதியை திரும்பப் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் உறுப்பினர்கள் தங்கள் நிதியை இன்னும் எளிமையாகவும் விரைவாகவும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT