விஐடி பல்கலைக்கழகத்தில் டாடா நிறுவன ஊழியர்கள் பி.டெக் கல்வி பயில்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் முன்னிலையில் பரிமாறி கொள்ளப்பட்டது. உடன், விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், துணை வேந்தர் காஞ்சனா பாஸ்கரன், டாடா நிறுவன மனிதவள அதிகாரி சீதாராம் கன்டி உள்ளிட்டோர்.
வேலூர்: விஐடி பல்கலைக்கழகம் மற்றும் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனம் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதன்மூலம் ராணிப்பேட்டையில் உள்ள டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலை ஊழியர்கள், 2026-2027-ம் கல்வியாண்டு முதல் விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். உற்பத்தி பொறியியல் பட்டப்படிப்பு படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள டாடா மோட்டார்ஸ் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் முன்னிலையில் விஐடி பதிவாளர் ஜெயபாரதி மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி சீதாராம் கன்டி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அப்போது, விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், தொழில் மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் சாமுவேல் ராஜ்குமார், உதவி இயக்குநர் கவுரவ் சுஷாந்த், மெக்கானிக்கல் துறை முதன்மையர் பி.குப்பன் மற்றும் புனே மண்டல வேலைவாய்ப்பு அலுவலர் சப்தே அமித் சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் செயல்பாட்டு பிரிவின் துணைத்தலைவர் பிரமோத் சவுத்ரி, மூத்த பொது மேலாளர் நீரஜ் அகர்வால், மனிதவள பிரிவு பொது மேலாளர் விவேக் பிந்த்ரா, கற்றல் மற்றும் மேம்பாட்டு பிரிவு பொது மேலாளர்கள் ரங்கா குந்தி, மார்ஷல் பெர்னாண்டஸ், வளாக திட்ட பிரிவு தலைவர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் ராணிப்பேட்டை ஆலை மனிதவள பிரிவு துணை பொது மேலாளர் அபியுதய் திவேதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.