வணிகம்

4 பெரிய மாநிலங்​களின் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய மகாராஷ்டிரா, முன்னேறிய தமிழகம்!

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தி​யா​வின் நான்கு மிகப்​பெரிய பொருளாதார மாநிலங்​களில் கடந்த 4 ஆண்​டு​களில் மகாராஷ்டிர மாநிலம் மிகக் குறைந்த பொருளா​தார வளர்ச்சியைப் பதிவு செய்​துள்​ளது. அதேவேளை​யில், ஒட்டுமொத்​தப் பொருளா​தார மதிப்​பில் (GSDP) அந்த மாநிலமே இப்​போதும் முதலிடத்​தில் நீடிக்​கிறது.

2024-25 நிதி​யாண்​டில் மகா​ராஷ்டி​ரா​வின் மொத்த மாநில உள்​நாட்டு உற்​பத்தி ரூ.42,67,771 கோடி என்று கணிக்கப்பட்டுள்​ளது. இருப்​பினும், வளர்ச்சி விகிதத்​தின் அடிப்​படை​யில் பார்த்​தால், கர்​நாடகம், குஜ​ராத் மற்​றும் தமிழ்​நாடு ஆகிய மாநிலங்​களை விட இம்​மாநிலம் பின்​தங்​கி​யுள்​ளது.

          

கர்​நாடகம் முதலிடம்

கரோனா காலத்​திற்​குப் பிந்​தைய சூழலில் (2021-22 முதல் 2024-25 வரை), கர்​நாடக மாநிலம் சுமார் 65 சதவீத வளர்ச்​சி​யுடன் முதலிடத்​தில் உள்​ளது. பெங்​களூரை மைய​மாகக் கொண்ட தகவல் தொழில்நுட்பம் மற்​றும் சேவைத் துறை​களின் அசுர வளர்ச்​சியே இதற்​குக் காரண​மாக கூறப்​படு​கிறது. கர்​நாடகத்​தின் ஜிஎஸ்​டிபி ரூ.17,02,227 கோடியி​லிருந்து ரூ.28,09,063 கோடி​யாக உயர்ந்​துள்​ளது.

இரண்​டாவது இடத்தில் குஜ​ராத்

தொழில்​துறை மற்​றும் உற்பத்தித்துறையில் வலு​வாக உள்ள குஜ​ராத் மாநிலம், 48 சதவீத வளர்ச்சி​யைப் பதிவு செய்து இரண்​டாவது இடத்தைப் பிடித்துள்​ளது. அந்த மாநிலத்​தின் பொருளா​தார மதிப்பு ரூ.18,79,826 கோடியி​லிருந்து ரூ.27,90,000 கோடி​யாக அதி​கரித்​துள்​ளது.

தமிழகத்​துக்கு மூன்​றாவது இடம்

பட்​டியலில் 3வது இடத்தைப் பிடித்​துள்ள தமிழகம், சுமார் 47% வளர்ச்​சியை எட்டியுள்​ளது. 2021-22-ல் ரூ.21,36,351 கோடியாக இருந்த தமிழகத்​தின் ஜிஎஸ்​டிபி, 2024-25-ல் ரூ.31,55,096 கோடி​யாக உயர்ந்​துள்​து. இதன் மூலம், ஒட்டுமொத்​தப் பொருளா​தார அளவில் மகாராஷ்ட்ராவுக்கு அடுத்​த​படி​யாகத் தமிழகம் நெருக்கமான போட்டியாளராக உருவெடுத்துள்ளது.

SCROLL FOR NEXT