வணிகம்

நவீன தொழில்​நுட்ப வசதிகளுடன் கூடிய 2 புதிய பாரத்பென்ஸ் பேருந்துகள் அறிமுகம்

செய்திப்பிரிவு

அகம​தா​பாத்: டெய்ம்​லர் இந்​தியா நிறு​வனம் பாரத்​பென்ஸ் பிராண்​டின் கீழ் நவீன தொழில்​நுட்ப வசதி​களு​டன் கூடிய 2 புதிய பேருந்​துகளை அறி​முகம் செய்​துள்​ளது.

குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்சியில், டெய்ம்​லர் இந்​தியா கமர்​ஷியல் வெஹிக்​கிள்ஸ் நிறு​வனம் பாரத்​பென்ஸ் டார்க் ஷிஃப்ட் 1926 மற்​றும் பாரத்பென்ஸ் 917 ஆகிய 2 பேருந்​துகளை அறி​முகம் செய்​தது.

இதில் டார்க் ஷிஃப்ட் 1926 பேருந்​து, உலகள​வில் நிரூபிக்​கப்​பட்ட ஆட்​டோமேட்​டட் மேனுவல் டிரான்​ஸ்​மிஷன் (ஏஎம்​டி) தொழில்​நுட்பத்​துடன் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இது நகரங்​களுக்கு இடையே​யான நீண்ட தூரப் பயணம் மற்​றும் பணி​யாளர் போக்குவரத்​துக்கு மிக​வும் உகந்​தது. போக்​கு​வரத்து நெரிசல் மற்றும் கடின​மான சாலைகளில் ஓட்​டுநர்​கள் அடிக்​கடி கிளட்ச் மற்​றும் கியர் மாற்​று​வதைத் தவிர்க்​கும் வகை​யில் இந்த தொழில்நுட்​பம் செயல்​படு​கிறது.

ஜெர்​மன் தொழில்​நுட்​பத்​தில் உரு​வான 260 குதிரைத்​ திறன் கொண்ட இதன் இன்​ஜின், சாலை​யின் தன்​மைக்கு ஏற்ப தானாகவே சரி​யான கியரைத் தேர்ந்​தெடுத்து சிறந்த எரிபொருள் சிக்​க​னத்தை வழங்​கு​கிறது. அதே​போல், பள்ளி மற்​றும் பணியாளர் போக்​கு​வரத்​துக்​காக அறி​முகம் செய்​யப்​பட்​டுள்ள பாரத்​பென்ஸ் 917 பேருந்​து, குறைந்த இயக்​கச் செலவு மற்​றும் ஓட்டுநர்​களின் மேம்​பட்ட உற்​பத்​தித் திறனை இலக்​காகக் கொண்டு உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

பாது​காப்​புக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கும் வகை​யில், இந்த புதிய பேருந்​துகளில் நிகழ்​ நேர வெப்​ப நிலை​யைக் கண்​காணிக்​கும் டயர் பிரஷர் மானிட்​டரிங் சிஸ்​டம் போன்ற அதி நவீன பாது​காப்பு அம்​சங்​களும் இணைக்​கப்​ பட்​டுள்​ளன. இந்த நவீன தொழில்​நுட்பங்​கள் மற்​றும் வசதி​கள் மூலம் பாரத்​பென்​ஸ் இந்​திய வர்த்தக வாகன சந்​தை​யில் தனது பங்கை மேலும் வலுப்​படு​த்த திட்டமிட்டுள்ளது.

SCROLL FOR NEXT