புதுடெல்லி: சுவிட்சர்லாந்து, இந்தியா இடையே கடந்த 2018-ல் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் நிதி விவரம் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் படி 2025-ம் ஆண்டுக்கான விவரம் மத்திய அரசிடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்திருக்கும் தொகை 8 க்கு மேல் குறைந்து உள்ளது. தற்போதைய சூழலில் அந்த நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் தரப்பில் ரூ.36,793 கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.
சுவிட்சர்லாந்து வங்கிகளில் அதிக தொகையை முதலீடு செய்திருக்கும் நாடுகளின் பட்டியலில் பிரிட்டன் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 2-ம் இடத்திலும், பிரான்ஸ் 3-ம் இடத்திலும் உள்ளன. மேற்கிந்திய தீவுகள், ஜெர்மனி, ஹாங்காங், நெதர்லாந்து, ஐக்கிய அரசு அமீரகம் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியா தற்போது 46-வது இடத்தில் உள்ளது.