வணிகம்

வணிகச் சுற்றுலா தொடர்பாக ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் இந்தியாவுக்கு முக்கியத்துவம்

செய்திப்பிரிவு

சென்னை: வணிகச் சுற்றுலா தொடர்​பாக ரஷ்​யா​வில் நடை​பெற்ற சர்​வ​தேச மாநாட்​டில் இந்தியாவுக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​பட்​டது. ரஷ்​யத் தலைநகர் மாஸ்​கோ​வில், கடந்த 17, 18 ஆகிய தேதி​களில் மூன்​றாவது சர்​வ​தேச மீட் குளோபல் மைஸ் காங்​கிரஸ் (MGMC 2025) மாநாடு நடை​பெற்​றது. வணிகச் சுற்றுலாத் துறை​யில் உலகப் புகழ்​பெற்ற சிறப்பு மைய​மாக மாஸ்கோ திகழ்​வதை இந்த மாநாடு உறு​திப்​படுத்தி உள்​ளது.

இந்த மாநாட்​டில், இந்​தி​யாவை உள்​ளடக்​கிய பிரிக்ஸ் மற்​றும் குளோபல் சவுத் அமைப்​பு​களின் 37 நாடு​களைச் சேர்ந்த 2,500-க்​கும் மேற்​பட்ட பிர​தி​நி​தி​கள் கலந்​து​கொண்​டனர். கடந்த ஆண்​டுடன் ஒப்​பிடும்​போது இது 2 மடங்கு ஆகும்.

மைஸ் இடங்​களின் வெற்​றி, வணிக நிகழ்​வு​களின் செயல்​திறன், நரம்​பியல் தொழில்​நுட்​பத்​தின் எதிர்​காலம் மற்​றும் இத்​துறை​யில் அனுபவப் பொருளா​தா​ரம் போன்ற தலைப்​பு​களை இந்த பல்​-வடிவ​மைப்​புத் திட்​டம் உள்​ளடக்கி இருந்​ததுடன், சாதனை அளவி​லான வணி​கச் சந்​திப்​பு​களை​யும் ஏற்​படுத்​தி​யது.

அதிவேக​மாக வளர்ச்​சி​யடைந்து வரும் வணிகச் சுற்றுலாச் சந்​தைகளில் ஒன்​றாக இருந்​த​தால், இந்த மாநாட்​டில் இந்​தியா முக்​கியப் பங்கு வகித்​தது. இந்​தி​யா​விலிருந்து 53 முக்​கிய வணிக அமைப்​பு​கள் இதில் பங்​கேற்​று, சர்​வ​தேச ஒத்​துழைப்​புக்​கான தங்​கள் ஆர்​வத்தை வெளிப்​படுத்​தின.

இதில் பங்​கேற்​றவர்​களில் 70% பேர் நிறு​வனங்​களின் மூத்த அதி​காரி​கள் மற்​றும் முடி​வெடுக்​கும் திறன் கொண்​ட​வர்​கள் என்​ப​தால், மாநாட்​டிலேயே பல முக்​கிய வணிக ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தா​யின. மாநாட்​டின் ஒரு பகு​தி​யாக சாதனை அளவாக 8,000-க்​கும் மேற்​பட்ட வணி​கச் சந்​திப்​பு​கள் நடை​பெற்​றன.

விஸ்​கி​ராஃப்ட் (Wizcraft) குழு​மத்​தின் நிறு​வனர் சப்​பாஸ் ஜோசப் இந்த மாநாட்​டில் பேசும்​போது, “மைஸ் என்​பது வெறும் வணி​கம் மட்​டுமல்ல, அது ஒரு நாட்​டின் பொருளா​தா​ரக் கொள்​கை​யின் ஒரு பகு​தி. ‘ஒரே மக்​கள், ஒரே உலகம்’ என்ற தத்​து​வத்தை இது வலுப்​படுத்​தும்” என்​றார்.

மேலும், இந்​திய மாநாட்டு மேம்​பாட்​டுப் பணி​யகத்​தின் (ICPB) உறுப்​பினர் துஷார் கேஷர்​வானி உள்​ளிட்ட பல சர்​வ​தேச வல்​லுநர்​கள் இத்​துறை​யில் நரம்​பியல் தொழில்​நுட்​பம் மற்​றும் செயற்கை நுண்​ணறி​வின் எதிர்​காலப் பயன்​பாடு குறித்து விவா​தித்​தனர்.

பிரிக்ஸ் மற்​றும் குளோபல் சவுத் நாடு​களின் ஒத்​துழைப்பை வலுப்​படுத்​தும் ஒரு பால​மாக இந்த மா​நாடு அமைந்​தது. மாஸ்கோ நகரம் தன்னை ஒரு சிறந்த வணிக மற்​றும் கலாச்​சார மைய​மாக உலகுக்​கு மீண்​டும்​ பறை​சாற்​றியுள்​ளது.

SCROLL FOR NEXT