வணிகம்

இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் கையெழுத்து: பியூஷ் கோயல் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தி​யா, அமெரிக்கா இடையி​லான தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் அடுத்த மாதம் கையெழுத்​தாகும் என்று மத்திய அமைச்​சர் பியூஷ் கோயல் தெரி​வித்​துள்​ளார். இந்​திய பொருட்​களுக்கு 25% வரி​யுடன், ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் 25% அபராத வரி என மொத்​தம் 50% வரி விதித்து அமெரிக்​கா. இதனிடையே, இரு நாடு​களுக்​கிடையே தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​படுத்​து​வது குறித்து பேச்​சு​வார்த்தை நடைபெற்று வந்​தது.

அமெரிக்​கா​வின் வேளாண் மற்​றும் பால் பொருட்​களை அனுமதிக்க வேண்​டும் என வலி​யுறுத்​தி​யது. இதனால் இந்​திய விவ​சா​யிகள் பாதிக்​கப்​படு​வார்​கள் என்​ப​தால் மத்​திய அரசு ஒப்புக் கொள்​ள​வில்​லை. இதனால் ஒப்​பந்​தம் தாமத​மாகி வந்​தது.

          

இந்​நிலை​யில், ரஷ்​யா​விட​ம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை நிறுத்த ஒப்​புக் கொண்​டுள்​ள​தால், இந்​தியா மீதான வர்த்தக வரி 18% ஆகக் குறைக்​கப்​படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் பதி​விட்​டார். இதற்கு பிரதமர் மோடி​யும் நன்றி தெரி​வித்​தார். இந்த ஒப்​பந்​தத்​தின் மூலம் இருதரப்பு வர்த்​தகம் 500 பில்​லியன் டால​ராக அதி​கரிக்​கும் என்​றும் தெரி​வித்​தார். இந்​நிலை​யில், இரு நாடு​களுக்கு இடையிலான வர்த்தக ஒப்​பந்த விவரங்​களை வெளி​யிட வேண்டும் என எதிர்க்​கட்​சிகள் நாடாளு​மன்​றத்​தில் வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

இதுகுறித்து மத்​திய வர்த்தக அமைச்​சர் பியூஷ் கோயல் நாடாளுமன்​றத்​தில் நேற்று முன்​தினம் பேசும்​போது, “அமெரிக்காவுட​னான ஒப்​பந்​தம் குறித்து பல்​வேறு நிலைகளில் பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. இந்த ஒப்​பந்​தத்​தால் இரு தரப்​புக்​கும் அதி​கபட்ச பலன் கிடைக்​கும். அதே​நேரம் விவசாயிகள் நலனை பாதிக்​கும் எந்த அம்​ச​மும் ஒப்​பந்​தத்​தில் இடம்​பெறாது” என்​றார்.

இந்​நிலை​யில், நாடாளு​மன்​றத்​தில் நேற்​றும் இதே பிரச்​சினையை எதிர்க்​கட்சி உறுப்​பினர்​கள் எழுப்​பினர். இந்​நிலை​யில், வளைகுடா நாடு​களு​ட​னான குறிப்பு விதி​கள் கையெழுத்​திடும் நிகழ்​வில் மத்​திய வர்த்தக அமைச்​சர் பியூஷ் கோயல் நேற்று பங்கேற்​றார்.

அப்​போது அவர் கூறும்​போது, “இந்​தி​யா, அமெரிக்கா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் தொடர்​பாக அடுத்த 5 நாட்​களுக்​குள் கூட்​டறிக்கை வெளி​யிடப்​படும். இதன் அடிப்படை​யில், இந்​திய பொருட்​கள் மீதான வரியை 18% ஆக குறைப்​பது தொடர்​பான நிர்​வாக உத்​தரவை அமெரிக்கா பிறப்பிக்​கும். இதையடுத்​து, இறுதி ஒப்​பந்​தம் மார்ச் மாத மத்தியில்​ கையெழுத்​தாகும்​” என்​றார்​.

SCROLL FOR NEXT