நிதி ஆயோக் அதிகாரி தீபக் பக்லா

 
வணிகம்

அதிக தொழில்முனைவோரை உருவாக்குகிறது இந்தியா: நிதி ஆயோக் அதிகாரி கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘லேர்ன் நெக்​ஸ்ட்’ என்ற தலைப்​பில் தனி​யார் டி.​வி. ஒன்று நடத்​திய கருத்​தரங்​கில், நிதி ஆயோக் அதி​காரி​யும், அடல் புதுமை கண்​டு​பிடிப்பு திட்ட இயக்​குநரு​மான தீபக் பக்லா கலந்து கொண்​டார்.

அவர் ‘வளர்ந்த இந்​தியா 2047: இந்​தி​யக் கல்​வி​யின் எதிர்​காலம் தொழில் ​முனை​வோர் திற​னா ?’ என்ற தலைப்​பில் பேசி​ய​தாவது: இந்​தி​யா​வின் கல்வி முறை உலகள​வில் சிறந்து விளங்​கக்​கூடிய நபர்​களை உரு​வாக்​கி​யுள்​ளது. சர்​வ​தேச நிறு​வனங்​களில் தலைமைச் செயல் அதி​காரி​களாக செயல்​படும் இந்​தி​யர்​களிடம், ஒரு வேலை​யைச் செய்து முடிக்​கும் திறன் மற்​றும் எந்​தவொரு வழி​காட்​டு​தலும் இன்​றிச் செயல்​படும் திறன் என 2 வித​மான திறன்​கள் உள்​ளன.

இந்​தி​யா​வின் கல்வி முறை, தேர்வு என்ற ஒரு கட்​டமைப்​பிலிருந்து புதுமை கண்​டு​பிடிப்​பு​கள், தொழில்​ முனை​வோர் திறன் மற்​றும் தகவ​மைப்​புத் திறன் ஆகிய​வற்​றில் கவனம் செலுத்​தும் ஒரு பெரிய மாற்​றத்தை நோக்கி நகர்ந்து கொண்​டிருக்​கிறது. புதுமை கண்​டு​பிடிப்​பு​களின் ஊக்​கத்​தால், தொழில்​ முனை​வோரை இந்தியா அதி​கள​வில் உரு​வாக்கி வரு​கிறது. இவ்​வாறு அவர்​ கூறினார்​.

SCROLL FOR NEXT