வணிகம்

பு​திய கோடீஸ்​வரர்​கள் எண்ணிக்கை​யில் சீனாவை முந்தியது இந்தியா

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலகளா​விய செல்வ அறிக்​கையை 2026 யுபிஎஸ் நிறு​வனம் வெளி​யிட்​டுள்​ளது.

இதில் கூறி​யிருப்​ப​தாவது: "கடந்த 2025-ல் இந்​தியா 31,033 புதிய கோடீஸ்​வரர்​களை உரு​வாக்​கி​யுள்​ளது. இது சீனா​வின் புதிய கோடீஸ்​வரர்​களின் எண்​ணிக்​கை​யான 14,079-ஐ விட 2 மடங்கு அதிகம். இந்​தி​யர்​கள் பணக்​காரர்​களாக மாறி​னாலும், அவர்​கள் மேற்​கத்​திய நாடு​களைப் போல தங்​கள் செல்​வத்​தைச் சேமித்து வைப்​ப​தில்​லை.

இந்​தி​யா​வின் மொத்த தனி ​நபர் செல்​வத்​தில் வெறும் 25.8 % மட்டுமே நிதிச் சொத்​துகளில் முதலீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இது அமெரிக்​கா​வில் 78.9 %, ஜப்​பானில் 68.9 %, தென் கொரி​யா​வில் 54.9 % மற்​றும் சீனா​வில் 51.9 % ஆக உள்​ளது. இந்த கணக்கெடுப்பில் இந்​தி​யா, பட்​டியலின் மிகக் கடைசி இடத்தில் உள்​ளது.

சீனா​வில் மொத்​தம் 53 லட்​சத்​துக்​கும் அதி​க​மான கோடீஸ்வரர்கள் உள்​ளனர். இந்​தி​யா​வில் இந்த எண்​ணிக்கை 9,44,000 ஆக உள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT