தானே: கோமியத்தை குடிக்க வற்புறுத்திய கணவர் மீது வழக்கு

முன்னாள் எம்.பி விநாயக் ராவத்

முன்னாள் எம்.பி விநாயக் ராவத்

Updated on
1 min read

தானே: சிவசேனா (உத்தவ் அணி) முன்னாள் எம்.பி விநாயக் ராவத். இவரது மகன் கீதேஷ் ராவத். இவர்கள் ஃபிரோஷ் பாபா, காசி பாபா என்ற இரு சாமியார்களை தங்கள் வீட்டுக்கு அழைத்து மாந்தீரிக பூஜை செய்துள்ளனர்.

அப்போது கீதேஷ் ராவத்தின் மனைவி கிரிஜாவை அந்த பூஜையில் கலந்து கொள்ளும்படி கூறியுள்ளனர். அவரது தலை முடியை கத்திரித்து சூனியம் செய்துள்ளனர். அப்போது சாமியார்கள் பூஜை செய்து அளிக்கும் கோமியத்தை குடிக்கும்படி கிரிஜாவை, மாமனார் விநாயக் ராவத், கணவர் கீதேஷ் ராவத் ஆகியோர் வற்புறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கிரிஜா அளித்த புகாரின் பேரில் கணவர் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

<div class="paragraphs"><p><em>முன்னாள் எம்.பி விநாயக் ராவத்</em></p></div>
ஆந்​தி​ரா​வில் மீண்​டும் கரோனா பரவு​கிறது: 2 பேர் உயி​ரிழப்பு; 8 பேருக்கு வைரஸ் தொற்று

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in