வணிகம்

அமெரிக்கா - இஸ்ரேல், ஈரான் போர் தாக்கம்: மார்ச்சில் இந்தியாவின் டீசல் ஏற்றுமதி 20% உயர்வு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போர் காரண​மாக, மார்ச் மாதத்​தில் இந்​தி​யா​வின் டீசல் ஏற்றுமதி 20% அதி​கரித்​துள்​ளது. அமெரிக்​கா-இஸ்​ரேல், ஈரான் போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்​ளது.

இதனால் கச்சா எண்​ணெய் கப்​பல்​கள் போக்​கு​வரத்து முடங்​கி, கச்சா எண்​ணெய் விலை உயர்ந்து வரு​கிறது. இந்​நிலை​யில், கச்சா எண்​ணெய் விலைக்​கும் சுத்​தி​கரிக்​கப்​பட்ட டீசல் விலைக்​கும் இடையே அதி​கரித்து வரும் இடைவெளி காரண​மாக, மார்ச் மாதத்​தில் இந்​தி​யா​வின் டீசல் ஏற்​றுமதி முந்​தைய மாதத்தை விட 20% உயர்ந்​துள்​ளது. இருப்​பினும், கப்​பல் போக்​கு​வரத்து தரவு​களின்​படி, சுத்​தி​கரிக்​கப்​பட்ட பெட்​ரோலியப் பொருட்​களின் மொத்த ஏற்​றுமதி 8% சரிந்​துள்​ளது.

          

பொது​வாக, சுத்​தி​கரிப்பு நிறு​வனங்​கள் லாபகர​மான ‘கிராக் ஸ்பிரட்' மற்​றும் மார்​ஜின்​களைப் பயன்​படுத்​திக் கொள்ள தங்​கள் உற்​பத்தி கலவையை மாற்றியமைக்கின்றன. ‘கி​ராக் ஸ்பிரட்' என்​பது கச்சா எண்​ணெய் விலைக்​கும் அதிலிருந்து பெறப்​படும் சுத்​தி​கரிக்​கப்​பட்ட பொருட்​களின் விலைக்​கும் இடையி​லான வித்​தி​யாசத்​தைக் குறிக்​கிறது.

‘மார்​ஜின்' என்​பது செல​வு​கள் மற்​றும் செயல்​பாட்​டுத் திறனுக்​குப் பிறகு சுத்​தி​கரிப்பு நிறு​வனங்​கள் ஈட்​டும் லாபத்​தைக் குறிக்​கிறது. ஹார்​முஸ் ஜலசந்தி மூடப்​பட்ட நிலை​யில் கச்சா எண்​ணெய் விலை உயர்ந்​தா​லும், அதன் தாக்​கம் பல்​வேறு எரிபொருட்​களில் மாறு​பட்​டுள்​ளது.

டீசல் மற்​றும் ஜெட் எரிபொருளுக்​கான கிராக் ஸ்பிரட்​கள் புதிய உச்​சத்தை எட்​டி​யுள்​ளன. அதே​நேரம் பெட்​ரோலுக்​கான விலை ஓரளவுக்கு நிலை​யாகவே உள்​ளன. கப்​பல்​களைக் கண்​காணிக்​கும் ‘கெப்​லர்' நிறு​வனத்​தின் தரவுகளின்​படி, பிப்​ர​வரி மாதத்​தில் 107.4 கோடி பீப்பாய்களாக இருந்த டீசல் ஏற்​றும​தி, மார்ச் 1 முதல் 28 வரையி​லான காலத்​தில் 129 கோடி பீப்​பாய்​களை எட்டியுள்ளது. இதனிடையே, மார்ச் மாதத்​தில் இந்தியாவின் பெட்​ரோல் ஏற்​றுமதி 33% குறைந்து 83.1 கோடி பீப்​பாய்​களாக வீழ்ச்​சி​அடைந்​தது.

SCROLL FOR NEXT