சர்​வேதச நிதி​யத்​தின் தலை​வர் கிறிஸ்​டலினா ஜார்​ஜிவா

 
வணிகம்

ஏஐ வரவால் 40% வேலைவாய்ப்புகள் பாதிக்கும்: சர்​வேதச நிதி​யத்​தின் தலைவர் கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சர்​வேதச நிதி​யத்​தின் (ஐஎம்​எஃப்) தலை​வர் கிறிஸ்​டலினா ஜார்​ஜிவா செய்தி நிறு​வனமொன்​றுக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யுள்​ள​தாவது:

ஏஐ மற்​றும் அது தொடர்​பான தொழில்​நுட்​பங்​களால் உலகளவில் 40 சதவீத வேலை​வாய்ப்​பு​கள் பாதிக்​கப்​படும். ஆரம்​பநிலை பணி​யிடங்​கள் ஏஐ வரவால் பாதிப்​புக்கு ஆளாக நேரிடும்.

          

இது முதல் வேலை​யைத் தேடும் இளம் பட்​ட​தா​ரி​களுக்​குப் சவாலாக அமை​யும். மேம்​பட்ட பொருளா​தார நாடு​களில் இந்த பாதிப்பு 60 சதவீதம் வரை இருக்​கலாம். ஆனால், இந்​தி​யா​வில் இது 26 சதவீத​மாக இருக்​கும். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

SCROLL FOR NEXT