அதிபர் ட்ரம்ப்பின் வரி விதிப்பை ரத்து செய்தது அமெரிக்க உச்ச நீதிமன்றம்

இதுவரை வசூலித்த இறக்குமதி வரிப் பணத்தை திருப்பித் தரவேண்டிய நெருக்கடி
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த உலகளாவிய வரி விதிப்பு சட்​ட​விரோத​மானது என கூறி, அமெரிக்க உச்ச நீதி​மன்​றம் ரத்து செய்​துள்​ளது. ஆனால், இதற்கு மாற்று திட்​டம் இருப்​ப​தாக ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

அமெரிக்​கா​வில் 2-வது முறை அதிப​ராக பதவி​யேற்ற ட்ரம்ப், பரஸ்பர வரி விதிப்பு முறையை கொண்டு வந்​தார். அமெரிக்​கப் பொருளா​தா​ரத்தை மீட்​டெடுக்​க​வும், வர்த்​தகப் பற்​றாக்​குறையைக் குறைக்​க​வும் ட்ரம்ப் வரி​களை இஷ்டத்​துக்கு உயர்த்​தி​னார். இறக்​குமதி செய்​யப்​படும் அனைத்​துப் பொருட்​களின் மீதும் குறைந்​த​பட்​சம் 10% வரி விதிக்​கப்​பட்​டது.

ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​த​தால், இந்​தியா மீதான வரியை 50% ஆக உயர்த்​தி​னார். அமெரிக்க நாடாளு​மன்​றத்​தின் ஒப்​புதல் இல்​லாமல் தனது இஷ்டத்​துக்கு இந்த வரி​வி​திப்பை ட்ரம்ப் உயர்த்​தி​னார். இதை எதிர்த்து ‘லேர்​னிங் ரிசோர்​சஸ், வி.ஓ.எஸ் செலக்​சன்ஸ் என்ற நிறு​வனங்​கள் வழக்கு தொடர்ந்​தன. இந்த வழக்​கு​கள் ஒன்​றிணைக்​கப்​பட்டு அமெரிக்க உச்ச நீதி​மன்​றத்​தில் விசா​ரிக்​கப்​பட்​டன.

சர்​வ​தேச அவசர​கால பொரு ளா​தார அதி​காரச் சட்​டத்​தின் (ஐஇஇபிஏ) கீழ், ஒரு அதிபர் தனது நிர்​வாக உத்​தர​வின் மூலம் இத்​தகைய வரி​களை விதிக்க அதி​காரம் உள்​ளதா என்​பதை உச்ச நீதி​மன்​றம் ஆய்வு செய்​தது. இதை விசா​ரித்த தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலை​மையி​லான அமர்வு வரி​களை விதிக்​கும் அதி​காரம் நாடாளு​மன்​றத்​துக்கே உள்​ளது. ஐஇஇபிஏ சட்​டம் அதிபருக்கு வரி​களை விதிக்க அனு​மதி அளிக்​க​வில்லை என்று கூறியது.

இந்த தீர்ப்​பில் மாறு​பட்ட கருத்தை தெரி​வித்த ஒரு நீதிப​தி, ‘‘இந்​தத் தீர்ப்​பால் ஏற்​கெனவே வசூலிக்​கப்​பட்ட பில்​லியன் கணக்​கான டாலர்​களை இறக்​கும​தி​யாளர்​களுக்​குத் திரும்ப அளிப்​பது அரசுக்கு பெரிய ‘தலை​வலி​யாக' இருக்​கும்’’ என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

உச்ச நீதி​மன்​றத்தின் தீர்ப்​பின் மூலம், இது​வரை சட்​ட​விரோத​மாக வசூலிக்​கப்​பட்ட 175 பில்​லியன் டாலர் வரிப்​பணத்தை அமெரிக்கா இறக்​குமதி செய்த நாடு​களின் நிறு​வனங்​களுக்கு திரும்ப அளிக்க வேண்​டி வரும். இது பெரும் நிதி நெருக்​கடியை ஏற்​படுத்​தும் என கூறப்​படு​கிறது.

மாற்​றுத் திட்​டம்: உச்ச நீதி​மன்​றத் தீர்ப்பு தமக்கு எதி​ராக வந்​ததையடுத்​து, வரி விதிப்பு தொடர்​பாகத் தன்​னிடம் மாற்​றுத் திட்​டம் இருப்​ப​தாக அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​து உள்​ளார்.

<div class="paragraphs"><p>அமெரிக்க அதிபர் ட்ரம்ப்</p></div>
திருமலையில் கோடைக்கால தரிசன ஏற்பாடுகள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in