ஈரானுக்கு எதிரான போரில் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். போர்ட் உட்பட உலகின் மிகப்பெரிய 2 விமானம் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா பயன்படுத்துகிறது. இந்தக் கப்பல்களை இயக்க ஒவ்வொரு கப்பலுக்கும் ஒரு நாளைக்கு தலா ரூ.58 கோடி செலவாகும்.
அதுமட்டுமல்லாமல், ராணுவ வீரர்களைக் குவிப்பதற்கும் அவர்களின் தேவைகளுக்கும் இதுவரை சுமார் ரூ.5,500 கோடி செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. முதல் நாளில் மட்டும் சுமார் ரூ.6,900 கோடி செலவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஈரான் மீதான போர் 2 மாதங்கள் நீடித்தால் ரூ.3.67 லட்சம் கோடி முதல் ரூ.10.57 லட்சம் கோடி வரை செலவாகும் என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். அதற்கு மேலும், போர் நீடித்தால், ரூ.18.87 லட்சம் கோடி செலவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, இஸ்ரேலுக்கு வழங்கப்படும் நிதி உதவியையும் கருத்தில் கொண்டால், இந்த செலவு அமெரிக்க நாட்டுக்கு மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் பல, ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.