சண்டிகர்: ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியில் ஹரியானா அரசின் வங்கி கணக்கில் இருந்து ரூ.590 கோடியை மோசடி செய்தது தொடர்பாக முன்னாள் மேலாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஐடிஎப்சி வங்கியில் ஹரியானா அரசின் சில கணக்குகள் இருந்தன. இந்த கணக்குகளில் உள்ள பணத்தை மற்றொரு வங்கிக்கு மாற்றும்படி ஹரியானா அரசு வேண்டுகோள் விடுத்தது. அப்போதுதான், ஹரியானா அரசு கணக்குகளில் இருந்த பணம் முறைகேடு செய்யப்பட்டது வங்கி நிர்வாகத்துக்கு தெரிந்தது. இந்த மோசடி தொடர்பாக ஊழல் தடுப்புத்துறை விசாரணையை தொடங்கியது.
அதில் இந்த மோசடியில் மூளையாக செயல்பட்டது, ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியில் பணியாற்றிய முன்னாள் கிளை மேலாளர் ரிபவ் ரிஷி என தெரியவந்தது. இவர் 6 மாதத்துக்கு முன்பு வங்கியில் இருந்து விலகியுள்ளார்.
இவருடன் இந்த மோசடியில் தொடர்புடைய முன்னாள் மக்கள் தொடர்பு மேலாளர் அபய், ரிபவ் ரிஷியின் மனைவி ஸ்வாதி சிங்ளா, இவரது சகோதரர் அபிஷேக் சிங்ளா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை ஹரியானா லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகிறது.