வணிகம்

ரஷ்ய வர்த்​தகக் கூட்​டாளி நிறுவனங்​கள் இந்​திய ரூபாயை பயன்​படுத்துவது எப்படி? - வழிமுறை​களை ஆராய்​கிறது ரிசர்வ் வங்கி

செய்திப்பிரிவு

மும்பை: ரஷ்ய வர்த்​தகக் கூட்​டாளி நிறு​வனங்​கள் தங்களிடம் உபரி​யாக உள்ள இந்​திய ரூபாயை எப்​படி பயன்​படுத்​து​வது என்​பது தொடர்​பான வழி​முறை​களை இந்​திய ரிசர்வ் வங்கி ஆராய்ந்து வரு​கிறது. உலக நாடு​கள் சர்​வ​தேச வர்த்​தகத்​துக்​காக அமெரிக்க டாலரை பயன்​படுத்​துகின்​றன.

இந்​நிலை​யில், அமெரிக்க டாலர் மீதான சார்​பைக் குறைப்ப​தற்கு சில நாடு​கள் முயற்சி செய்து வரு​கின்​றன. அந்த வகை​யில், கடந்த சில ஆண்​டு​களாக, இந்​தி​யா​வும் ரஷ்​யா​வும் இருதரப்பு வர்த்​தகத்​துக்கு தங்​கள் சொந்த நாட்டு நாண​யங்​களை (ரூ​பாய் மற்​றும் ரூபிள்) பயன்​படுத்தி வரு​கின்​றன.

          

அதே​நேரம், ரஷ்​யா​வுக்​கான ஏற்​றுமதி மதிப்​பை​விட கூடு​தலான மதிப்​புக்கு இந்​தியா இறக்​குமதி செய்​கிறது. இதனால் ரஷ்ய வர்த்தக நிறு​வனங்​களிடம் இந்​திய ரூபாய் அதிக அளவில் குவிந்து வரு​கிறது. இதை வேறு நாடு​களு​ட​னான வர்த்​தகத்​துக்கு பயன்​படுத்த முடிய​வில்​லை.

இதையடுத்​து, ரஷ்ய வர்த்​தகர்​கள், வங்​கி​களிடம் உள்ள உபரி ரூபாய் இருப்​பு​களை இந்​திய அரசுப் பத்​திரங்​களில் முதலீடு செய்ய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு அனு​ம​தித்​தது. ஆனாலும், ரஷ்ய வர்த்தக நிறு​வனங்​களிடம் இந்​திய ரூபாய் அதிக அளவில் இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், மும்​பை​யில் நடை​பெற்ற ரஷ்​யா-இந்​தியா மன்ற கூட்​டத்​தில் பங்​கேற்ற ரிசர்வ் வங்​கி​யின் அந்​நியச் செலா​வணித் துறை​யின் தலை​மைப் பொது மேலா​ளர் என்​.செந்​தில் குமார் பேசி​ய​தாவது: ரஷ்யக் கூட்​டாளி நிறு​வனங்​களால் திரட்​டப்​பட்ட இந்​திய ரூபாயை, அவர்​களின் இறக்​கும​திக்​கான பணத்தை செலுத்​து​வதற்கோ அல்​லது இந்​தி​யா​வில் மூலதன முதலீடு​களைச் செய்​வதற்கோ பயன்​படுத்​து​வதற்​கான பல்​வேறு வழி​முறை​களை வழங்​கு​வது பற்றி ரிசர்வ் வங்கி ஆராய்ந்து வரு​கிறது.

ஏற்​றும​தி​யாளர்​கள் அல்​லது இறக்​கும​தி​யாளர்​கள் உள்​ளூர் நாண​யங்​களைப் பயன்​படுத்​து​வதற்கு ஒரு​வித நம்​பிக்கை வர வேண்​டும், இது இந்​திய ரூபா​யில் நடக்​கும் பரிவர்த்​தனை​களின் அளவை அதி​கரிக்க உதவும். பரிவர்த்​தனை​களைச் செய்​யாதவரை, சந்தை உரு​வாக முடி​யாது. எனவே, நாம் தொடர்ந்து பரிவர்த்​தனை​களைச் செய்​யும்​போது, ரூபாய்​-ரூபிள் பரிவர்த்​தனை​களைச் செய்​வ​தில் அதிக ஆர்​வம் இருப்​பதை நாம் காணும்​போது, சந்தை உரு​வாவதை நாம்​ காண்​போம்​. இவ்​வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT