வணிகம்

டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.74 லட்சம் கோடி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த டிசம்​பரில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.74 லட்​சம் கோடியை எட்​டி​யுள்​ளது. இது, 2024 டிசம்​பர் ஜிஎஸ்டி வசூலான ரூ.1.64 லட்​சம் கோடி​யுடன் ஒப்​பிடு​கை​யில் 6.1% மட்​டுமே அதி​கம். வரி குறைப்பை அடுத்து உள்​நாட்டு விற்​பனை​ மூலம் கிடைக்​கும் வரு​வாய் வளர்ச்சி வேகம் குறைந்​துள்​ளது.

அதன்​படி, உள்​நாட்டு பரிவர்த்​தனை​களின் மூல​மாக கிடைத்த மொத்த வரு​வாய் 1.2% மட்​டுமே உயர்ந்து ரூ.1.22 லட்​சம் கோடியாக மட்​டுமே இருந்​தது. அதே​நேரம், இறக்​குமதி பொருட்கள் மூல​மாக கிடைத்த வரி வரு​வாய் 19.7% அதி​கரித்து ரூ.51,977 கோடி​யாக இருந்​தது.

இதையடுத்து டிசம்​பரில் நிகர ஜிஎஸ்டி வரு​வாய் 2.2% மட்​டுமே உயர்ந்து ரூ.1.45 லட்​சம் கோடி​யாக இருந்​தது என்று மத்​திய அரசு நேற்று வெளி​யிட்ட புள்​ளி ​விவரத்​தில் தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT