வணிகம்

பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.83 லட்சம் கோடி!

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​நாட்​டின் சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்​டி) வசூல், நடப்பு ஆண்டு பிப்​ர​வரி மாதத்​தில் ரூ.1.83 லட்​சம் கோடி​யாக உயர்ந்​துள்​ளது.

இது கடந்த ஆண்​டின் இதே காலக்​ கட்​டத்​துடன் ஒப்​பிடு​கை​யில் 8.1 சதவீத வளர்ச்​சி​யாகும் என்று மத்​திய அரசு நேற்று வெளி​யிட்ட புள்​ளி​ விவரத்​தில் தெரி​வித்​துள்​ளது. நடப்​பாண்டு பிப்​ர​வரி மாதத்தில் ஜிஎஸ்டி மொத்த வசூல் ரூ.1.83 லட்​சம் கோடி​யாக இருந்தது. இது, முந்​தைய 2025ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் வசூலான தொகை​யுடன் ஒப்​பிடு​கை​யில் 8.1 சதவீதம் அதி​கம் ஆகும்.

          

உள்​நாட்​டுப் பரிவர்த்​தனை​கள் மூலம் கிடைத்த ஜிஎஸ்டி வரு​வாய் 5.3 சதவீதம் உயர்ந்து ரூ.1.36 லட்​சம் கோடி​யாக உள்​ளது. அதேபோன்​று, வெளி​நாடு​களி​ல் இருந்து இறக்​குமதி செய்​யப்​பட்ட பொருட்​கள் மீதான ஜிஎஸ்டி வசூல் 17.2 சதவீதம் அதி​கரித்து ரூ.47,837 கோடி​யாக பதி​வாகி​யுள்​ளது.

ரூ.22,595 கோடி ரீஃபண்ட் வரி செலுத்​து​வோருக்கு திரும்ப வழங்கப்​பட்ட ரீஃபண்ட் தொகை​யான ரூ.22,595 கோடியைக் கழித்த பிறகு, பிப்​ர​வரி மாதத்​தின் நிகர ஜிஎஸ்டி வரு​வாய் ரூ.1.61 லட்​சம் கோடி​யாக உள்​ளது. நடப்பு நிதி​யாண்​டில் ஏப்​ரல் முதல் பிப்ர​வரி 28 வரையி​லான 11 மாத கால மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.20.27 லட்​சம் கோடியை எட்​டி​யுள்​ளது. இது முந்​தைய நிதியாண்டை விட 8.3 சதவீதம் அதி​க​மாகும் என புள்​ளி​ விவரத்தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT