நாக்பூர் தொழிற்சாலை வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழப்பு; 18 பேர் காயம்

நாக்பூர் தொழிற்சாலை வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழப்பு; 18 பேர் காயம்
Updated on
1 min read

நாக்பூர்: மகா​ராஷ்டிர மாநிலம், கட்​டோல் பகுதி, ரவுல்​கானில் சுரங்க, தொழில்​துறை வெடிபொருள் உற்​பத்தி செய்​யும் எஸ்​பிஎல் எனர்ஜி லிமிடெட் தொழிற்​சாலை இயங்கி வரு​கிறது.

இந்த தொழிற்​சாலை​யில் நேற்று காலை திடீரென வெடி​விபத்து ஏற்​பட்​ட​தாக போலீஸார் தெரி​வித்தனர். இந்த சம்​பவத்​தில் 17 பேர் உயி​ரிழந்​துள்​ளனர்.

இது தொடர்​பாக எஸ்​பிஎல் தொழிற்​சாலை அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: இன்று காலை தொழிற்​சாலை வளாகத்​தில் உள்ள டெட்​டனேட்​டர் பேக்​கிங் யூனிட்​டில் காலை 7 மணி முதல் காலை 7.15 வரை இந்த வெடி​ விபத்து நடந்துள்​ளது. வெடி விபத்​தில் காயமடைந்த தொழிலா​ளர்​கள் நாக்​பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டனர்.

விபத்​தில் இது​வரை 17 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். இங்கு தொடர்ந்து மீட்பு நடவடிக்​கைகள் நடை​பெற்று வரு​கின்​றன. சம்​பவம் தொடர்​பான முழுத் தகவல்​கள் விரை​வில் வெளி​யிடப்​படும். காயமடைந்த 18 பேருக்கு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை அளிக்கப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

வெடி​ விபத்து நடந்த இடத்​தில் தேசிய பேரிடர் மீட்​புப் படையினரும் (என்​டிஆர்​எஃப்), மாநில பேரிடர் மீட்​புப் படையினரும் ​(எஸ்​டிஆர்​எஃப்) மீட்​புப் பணி​களை மேற்​கொண்டு வருகின்​றனர். வெடி​விபத்து நடந்த தொழிற்​சாலையை மாவட்ட ஆட்​சி​யர் விபின் இடங்​கர், போலீஸ் எஸ்​.பி.ஹர்ஷ் போடர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்​வு செய்​தனர்​.

நாக்பூர் தொழிற்சாலை வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழப்பு; 18 பேர் காயம்
காமேனி கொல்லப்பட்டதை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டம்: இணைய சேவை துண்டிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in