வணிகம்

பங்குகள் விலக்கல் மூலம் ரூ.80 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு

செய்திப்பிரிவு

பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் விலக்கல் மூலம் ரூ.80 ஆயிரம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விலக்குவதன் மூலம் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கவும், நிறுவனங்களின் திறனை மேம்படுத்தவும், நிர்வாகத்தில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் பட்ஜெட்டின் போது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். அதன்படி, 2026- 2027 நிதியாண்டில் பொதுத் துறை பங்குகள் விலக்கல் மற்றும் சொத்துகளைப் பணமாக்குவதன் மூலம் ரூ.85 ஆயிரம் கோடி நிதியை திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

          

வரி அல்லாத வருவாயை அதிகரிக்க இந்த இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த 2025 - 2026 நிதியாண்டில் ரூ.47 ஆயிரம் கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கு தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், எங்கெல்லாம் அவசியம் உள்ளதோ அந்தந்த விஷயங்களில் அரசு கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது ரூ.80 ஆயிரம் கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT