சென்னை: சென்னையில் இன்று (மே.6) தங்கம் விலை பவுனுக்கு ரூ.1840 உயர்ந்துள்ளது. அதேபோல் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அந்தவகையில், தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று தங்கம் விலையானது கிராமுக்கு ரூ.180 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,820-க்கும், பவுனுக்கு ரூ.1440 குறைந்து ஒரு பவுன் ரூ.1,10,560-க்கு விற்பனையானது.
இந்நிலையில் தங்கம் விலையானது இன்று அதிரடியாக உயர்ந்து உள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,050-க்கும், பவுனுக்கு ரூ.1840 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,12,400-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்: சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கு விற்பனையான நிலையில் இன்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கு விற்பனையாகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.