வணிகம்

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை - இன்றைய நிலவரம் என்ன?

அனலி

சென்னை: தங்கம் விலை இன்று (பிப்.18) மேலும் குறைந்து ஒரு கிராம் ரூ.14,230-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.

சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

          

இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வரு​கிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (பிப்.18) காலை சென்​னை​யில் 22 காரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,230-க்கு விற்​பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.720 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,13,840-க்கு விற்பனை ஆகிறது.

அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.12,180-க்கும் பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ.97,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.260-க்​கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,60,000-க்​கும் சந்தையில் விற்பனை ஆகிறது.

பிளாட்டினம் விலை கிராமுக்கு ரூ.46 குறைந்து ஒரு கிராம் ரூ.5,942-க்கு விற்பனையாகிறது.

SCROLL FOR NEXT