வணிகம்

தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை: சர்வதேச பொருளாதார சூழல் காரணமாக சென்னையில் ஆபரணத் தங்​கத்​தின் விலை கடந்த 2 நாட்​களாக உயர்ந்து வரு​கிறது.

அந்த வகை​யில் சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்து, ரூ.94 ஆயிரத்து 160-க்கு விற்​பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்​கம் ரூ.230 உயர்ந்து, ரூ.11 ஆயிரத்து 770-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்​கம் ரூ.1 லட்​சத்து 2,720 ஆக இருந்​தது.

அதேநேரத்​தில், ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதி​கரித்து ரூ.170 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.5 ஆயிரம் உயர்ந்து ரூ.1 லட்​சத்து 70 ஆயிர​மாகவும் இருந்​தது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT