வணிகம்

தங்கம் விலை புதிய உச்சம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,760 உயர்வு

டெக்ஸ்டர்

சென்னை: தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்று (ஜன.12) கிராமுக்கு ரூ.220 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்​வ​தேச பொருளா​தா​ரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில், தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகிறது. கடந்த சில மாதங்​களாகவே தங்​கம் விலை அதிகரித்துவரு​கிறது. சில நேரங்​களில் விலை குறைந்​தா​லும், மீண்​டும உயர்ந்து விடு​கிறது.

இந்த நிலையில், இன்று (ஜன.12) தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் ரூ13,120-க்கும் பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு பவுன் 1,04,960க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்று கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.287, கிலோவுக்கு அதிரடியாக ரூ.12,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,87,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,945க்கும் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று முன் தினம் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.100 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,03,200க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1,760 உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

SCROLL FOR NEXT