சென்னை: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித்தை உயர்த்த போவதாக நிலவும் அதிக எதிர்பார்ப்பு, வலிமையாகும் அமெரிக்க டாலர், அதிக வட்டி தரும் பத்திரங்களை முதலீட்டாளர்கள் வாங்குவது ஆகிய காரணங்களால், தங்கத்தின் விலை நவ.9-ம் தேதி முதல் குறைந்து வருகிறது.
இதற்கிடையில், 11 மாதங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் (நவ.17) ஒரு பவுன் ரூ.1 லட்சத்துக்குக் கீழ் இறங்கியது. இதன்தொடர்ச்சியாக, சென்னையில் நேற்றும் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.
பவுனுக்கு ரூ.2,040 குறைந்து, ரூ.97 ஆயிரத்து 720-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.255 குறைந்து, ரூ.12 ஆயிரத்து 215-க்கு விற்கப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 600 ஆக இருந்தது. கடந்த 9 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.8,320 வரை குறைந்துள்ளது. இது போல, வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.185 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, ரூ.1 லட்சத்து 85 ஆயிரமாகவும் இருந்தது.