சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.2) சென்னையில் பவுனுக்கு ரூ.1,120 என உயர்ந்துள்ளது. இதனால் மீண்டும் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த டிச.27-ல் ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800 ஆக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அதன்பின் விலை குறையத் தொடங்கியது. தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் விலை குறைந்தது. அதன்படி பவுனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.99,520-க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,580-க்கும், பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,00,640-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,09,792-க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை: சென்னையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.260-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.4,000 உயர்ந்து, ரூ.2,60,000-க்கு விற்பனை ஆகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மீண்டும் ரூ.90-ஐ நெருங்கி வீழ்ச்சி கண்டுள்ளது. இத்துடன், சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடும் அதிகரித்துள்ளதால் தங்கம் விலை மீண்டும் கூடியுள்ளது.
கடந்த 4 வர்த்தக தினங்களில் தங்கம் விலை பவனுக்கு ரூ.5,000 வரை சரிவை கண்ட நிலையில், தற்போது மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது நகை வாங்க விழைவோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.