சென்னை: தங்கம் விலை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்று (நவ.13) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.960 என்று சரிந்துள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அமெரிக்க இடைத்தேர்தல் மற்றும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள், ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு இடையிலான கருத்து முரண்பாடு குறித்து கசிந்த தகவல், அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் காரணத்தால் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதாக வணிக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,600 என்று குறைந்தது.
இன்றைய விலை விவரம்
சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,695-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.960 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,01,560-க்கு விற்பனை ஆகிறது.
24 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,048 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,10,792-க்கும், 18 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு பவுன் ரூ.83,120-க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.195-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.1,95,000-க்கும் விற்பனை ஆகிறது.