வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைவு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

வேட்டையன்

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சென்னையில் இன்று (ஜூன் 29) பவுனுக்கு ரூ.560 என குறைந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரை சந்தையில் இன்று மாற்றமில்லை.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் (மே) தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,280 மற்றும் ரூ.560 என உயர்ந்தது. இந்த சூழலில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,300-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ.1,06,400-க்கும் விற்பனையாகிறது.

24 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.77 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,509-க்கு விற்பனையாகிறது. 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,125-க்கு விற்பனையாகிறது.

இன்று வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.

SCROLL FOR NEXT