வணிகம்

சென்னையில் தங்கம் பவுனுக்கு ரூ.400 உயர்வு - உச்சத்தில் வெள்ளி விலை!

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.99,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில், வெள்ளி விலை உச்சம் தொட்டுள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்.17-ம் தேதி ரூ.97,600-ஆக விலை அதிகரித்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இதைத் தொடர்ந்து, பவுன் தங்கம் அக்.28-ம் தேதி ரூ.88,600 ஆகவும், நவ.13-ம் தேதி ரூ.95,920 ஆகவும் இருந்தது.

அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், டிச.12-ம் தேதி வரலாறு காணாத வகையில் ரூ.98,960 ஆக உயர்ந்தது. பின்பு, 3 நாட்களுக்கு அதே விலையில் நீடித்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை டிச.15-ல் 1 லட்சம் ரூபாயை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அன்றைய நாளில் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாள், சற்று விலை குறைந்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.17) பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.99,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து, 12,400-க்கு விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் ரூ.1,08,216 ஆக இருக்கிறது.

இதுபோல, வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.11 உயர்ந்து, ரூ.222 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.11 ஆயிரம் உயர்ந்து, ரூ.2 லட்சத்து 22 ஆயிரமாகவும் இருக்கிறது.

SCROLL FOR NEXT