வணிகம்

ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,120 உயர்வு: ரூ.95 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை!

டெக்ஸ்டர்

சென்னை: இன்று (நவ.28) தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.95,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்.17-ம் தேதி ரூ.97,600-ஆக விலை அதிகரித்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு கடந்த அக். 28-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.88,600 ஆக குறைந்தது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருக்கிறது.

இந்த நிலையில், சென்னையில் இன்று (நவ.29) தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.95,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.140 உயர்ந்து, ரூ.11,980-க்கு விற்கப்படுகிறது.

இதுபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.9 உயர்ந்து, ரூ.192 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.9,000 உயர்ந்து, ரூ,1.92 லட்சமாகவும் உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டு ரூ.89.50 ஆக உள்ளது. இத்துடன், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பதும் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது.

நேற்று ரூ.560 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.94,720-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.1,120 ரூபாய் உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT