வணிகம்

இந்தியாவில் தங்கத்தின் தேவை 6% சரிவு: உலக தங்க கவுன்சில் தகவல்

செய்திப்பிரிவு

மும்பை: உலக தங்க கவுன்​சில் இந்​தி​யப் பிராந்​திய சிஇஓ சச்​சின் ஜெயின் கூறிய​தாவது: நடப்​பு நிதியாண்டின் ஏப்​ரல்​-ஜூன் காலாண்டில் இந்தியாவில் தங்​கத்​துக்கான தேவை 6% குறைந்துள்ளது. அதன்​படி, கடந்த 2025-ம் ஆண்​டின் இதே காலாண்​டில் 139.7 டன்​களாக இருந்த உள்​நாட்டு தங்​கத்​தின் தேவை தற்​போது 131.4 டன்​களாக குறைந்தது.

அளவின் அடிப்​படை​யில் தேவை குறைந்​திருந்​தா​லும், ரூபாய் மதிப்​பின் அடிப்​படை​யில் இது அதி​கரித்​துள்​ளது. அதன்​படி, ஏப்​ரல்​-ஜூன் காலாண்​டில் ரூ.1,98,100 கோடி மதிப்​பிலான தங்​கம் வாங்கப்​பட்​டுள்​ளது. இது கடந்த ஆண்​டின் இதே கால ​கட்​டத்​தின் (ரூ.1,32,500 கோடி) மதிப்பை விட 50% அதி​கம்.

விலை அதி​க​மாக இருந்​தா​லும் இந்​திய நுகர்​வோர் தங்​கத்​திற்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வரு​வதை இது காட்​டு​கிறது. மேலும் தங்கம் மீதான சுங்க வரியை இந்திய அரசு உயர்த்​தியதைத் தொடர்ந்​து, தங்​கக் கடத்​தல் மற்​றும் சட்​ட​விரோதக் கறுப்​புச் சந்தை வர்த்​தகம் அதி​கரித்​துள்​ள​து. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

கடந்த மே மாதம் உரை​யாற்​றிய பிரதமர் நரேந்​திர மோடி, கச்சா எண்​ணெய் விலை​யேற்​றத்​தால் நாட்​டின் இறக்​குமதி செலவு அதிகரித்து வரு​வதைச் சுட்​டிக்​காட்​டி, அத்​தி​யா​வசி​யமற்ற முறையில் தங்​கம் வாங்​கு​வதைக் குறைத்து அந்நியச் செல​வாணி கையிருப்​பைச் சேமிக்க உதவு​மாறு பொது​மக்​களுக்​குக் கோரிக்கை விடுத்​திருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT