வணிகம்

ஜிஎம்டி-சுந்தரம் பைனான்ஸ் இணைந்து அதிநவீன இயந்திரங்கள் வாங்க எளிய கடன் வசதி

செய்திப்பிரிவு

சென்னை: அதி நவீன இயந்​திரங்​கள் வாங்​கு​வதற்​கான கடன் வசதி கிடைப்​பதை எளி​தாக்க இந்​தி​யா​வின் வங்​கி​சாரா நிதி நிறு​வன​மான சுந்​தரம் பைனான்​ஸ், தானி​யங்கி இயந்​திரங்​கள் தயாரிப்பில் முன்​னணி​யில் உள்ள ஜிஎம்டி இன்​ஜினியர்ஸ் நிறு​வனத்​துடன் ஒப்​பந்​தம் செய்து கொண்​டுள்​ளது.

இதுகுறித்து சுந்​தரம் பைனான்ஸ் எஸ்​எம்இ பிரி​வின் தலை​வர் ராகுல் ஜோதி குமரன் கூறிய​தாவது: உற்​பத்​தித் துறையைச் சேர்ந்த தொழில​திபர்​கள், ஜிஎம்டி இன்​ஜினியர்ஸ் நிறு​வனத்​தின் அதிநவீன ‘சிஎன்சி பெண்​டிங்’ இயந்​திரங்​கள், ஃபைபர் லேசர் கட்​டிங் சிஸ்​டம்​கள், பவர் பிரஸ்​கள் மற்​றும் ஆட்​டோமேஷன் உபகரணங்​களை எளி​தாக​வும் விரை​வாக​வும் வாங்​கு​வதற்கு ஏது​வாக நிதி உதவி​களை வழங்​கு​வதே இந்த ஒப்​பந்​தத்​தின் முக்​கிய நோக்​கம்.

சிறிய மற்​றும் நடுத்தர தொழில் நிறு​வனங்​கள், தொழிற்​கூடங்​கள் மற்​றும் தொழில்​முறை நிறு​வனங்​கள் தங்​களுக்​குத் தேவை​யான உலகத்​தரம் வாய்ந்த உற்​பத்தி தொழில்​நுட்​பங்​களை எளிய முறை​யில் பெற இந்த நடவடிக்கை வழி​வகுக்​கும். சுந்​தரம் பைனான்​ஸின் விரை​வான நிதிச் சேவை மற்​றும் ஜிஎம்டி இன்​ஜினியர்ஸ் நிறு​வனத்​தின் உயர்ரக இயந்​திரங்​கள் மூலம், உற்​பத்​தி​யாளர்​கள் தங்​கள் உற்​பத்​தித் திறனை அதி​கரித்​து, பெரிய அளவி​லான தொழில் வாய்ப்​பு​களை நம்​பிக்​கை​யுடன் பெற முடி​யும். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

SCROLL FOR NEXT